FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 29, 2025, 01:00:38 PM

Title: பிரிவு!
Post by: joker on December 29, 2025, 01:00:38 PM
அழகிய கடல் அலை
மெல்ல பாதம் நனைக்கயில்
சில்லென்ற காற்று மெல்ல
காலத்தை பின்னோக்கி
இழுக்கிறது

உன்னோடு விளையாடிய
நினைவுகள்
என் நெஞ்சில் ஒட்டிக்கொள்கிறது
ஈரப்பாதத்தில் ஒட்டிய
கடற்கரை மணல் போல

விதி செய்த சதியில்
பேசாமல் சில காலம்
கடந்திற்று

ஓர் நாள் நண்பரின் திருமணத்தில்
ஒப்பனைகள் ஒவ்வாத உன் முகத்தில்
ஒப்பனை குளியல்

பகட்டான நிறத்தில் உன் ஆடைகள் .
தேவதைகள் வெள்ளை நிற உடை தான்
அணிய வேண்டுமா என்ன ?

என்னை கண்டும்
காணாததாய் நடிக்கும் 
உன் காந்த விழிகள்

நாம் பிரிந்த பின்
எத்தனை மாற்றங்கள்
உன்னிடம்

என் பிரிவு
உனக்கு நன்மை பயக்கும் எனில்
என்னை விட மகிழ்பவர் யாரோ

சில நேரம்
சிலரின் பிரிவும்
நன்மைக்கே


***Joker***