FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: RajKumar on December 25, 2025, 03:49:48 PM
-
நீங்கள்
கடந்து
வந்த படிகளை
உடைக்காதீர்கள்...
ஒரு வேளை
இறங்குவதற்கு
அதே படிகள்
தேவைப்படலாம்...
விதி வலியது
காலம் மிகக் கொடியது..
-
*கல்*
*நெஞ்சமென்பது*
*கற்கலால்*
*ஆனதென்று முடிவு*
*செய்து விடாதீர்கள்...*
*அது*
*நீண்ட, நாள்பட்ட*
*ஏமாற்றத்தினாலும்,*
*நம்பிக்கை*
*துரோகத்தினாலும்*
*ஏற்பட்ட*
*வலிகளின் உறைதல்...*
-
நீங்கள்
எங்கே இருக்க
வேண்டும் என்று
விதி முடிவு செய்யட்டும்...
ஆனால்,
எப்படி இருக்க
வேண்டும் என்பதை
நீங்கள் முடிவு செய்யுங்கள்...
-
புல்லை
உண்ணும் பூச்சி,
பூச்சியை
உண்ணும் தவளை,
தவளையை
உண்ணும் பாம்பு,
பாம்பினை
உண்ணும் கழுகு,
கழுகைச்
செரிக்கும் மண்,
மண்ணில்
விழும் விதை என...
மீண்டும்,
தொடங்கும் சுழற்சி
அனைத்தையும்,
கொல்லும் நாம்...
உண்ணப்படுதலுக்கும்,
கொல்லப்
படுதலுக்குமிடையே
ஊடாடும்
இப் பூமியில்
நம் வாழ்நாள்...
-
அழகாய் தான்
இருக்கிறது...
இந்த
மௌனமும்,
அமைதியும்,
சில
நேரங்களில்
தனிமையும்...
-
தாயிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
அன்பாக
இருப்பேன் என்று...
தந்தையிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
உங்கள் பெயரை
காப்பாற்றுவேன் என்று...
மனைவியிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
என் காதல்
உனக்கானது மட்டும் என்று...
சகோதரனிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
உனக்கு உற்ற
உறுதுணையாய்
இருப்பேன் என்று...
சகோதரியிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
உனக்குச் செய்யும்
சீர் ஒரு சுமையே
இல்லை என்று...
மகனிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
உலகமே
எதிர்த்தாலும்
நான் உன் பக்கம்
இருப்பேன் என்று...
மகளிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
உன் கண்ணில்
நீர் வழிந்தால்
என் கண்ணில்
இரத்தம் வரும் என்று...
வேறு எவருக்கும்,
நீங்கள் எதை
நிரூபித்தாலும்,
அது கடலில்
கொட்டிய பெருங்காயமே...
-
தேவைகள்
முடிந்ததும்,
தூக்கி எறியப்பட்ட
குப்பைகள்
பல உண்டு...
அதில்,
சில
விலை மதிக்க
முடியாத
குப்பைகளும் உண்டு...
அவற்றிற்கு,
மனங்கள்
என்று பெயர்...
-
வாழ
வேண்டுமே
என்று நினைக்கதீர்கள்...
வாழ்ந்தே
ஆக வேண்டும்
என்று முடிவு எடுங்கள்...
*துன்பமும்,
*தூசியாய் தெரியும்...
-
எவ்வளவு
சம்பாதிக்கிறீர்கள்,
எங்கே
வாழ்கிறீர்கள்
என்பதை விட
மிக முக்கியமானது...
மனதோடு
எவ்வளவு
மகிழ்ச்சியாய்
இருக்கின்றீர்கள்
என்பது தான்...
-
நிலைமை மாறினால்,
மகிழ்ச்சியாக
இருக்கலாம்
என்பது பொய்...,
மகிழ்ச்சியாக
இருந்தாலே,
நிலைமை மாறிவிடும்
என்பதே உண்மை...!!!
-
ஒரு
விஷயத்தைபற்றி
நாம் யோசிக்க
வேண்டுமென்றால்
அதற்கு மதிப்பு
இருக்க வேண்டும்...
தகுதி இல்லாத
ஒன்றை பற்றி
யோசித்து
நம் நிம்மதியை
இழந்து விடக்கூடாது...!!!
-
*''கனவை நனவாக்க வேண்டும்...!*
............................................................
வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் கனவு என்பது மிக மிக அவசியமாகும்...
கனவை மட்டும் கண்டு கொண்டிருப்பது வெறும் கனவாகத் தான் இருக்கும், கனவோடு இணைந்து பயணம் செய்தால் தான் அது செயல் வடிவம் பெறும்...
வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள், கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள்...
நாம் தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக் கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். பலருக்கும் பல குறிக்கோள்கள் இருக்கும், அதை அடைவதற்கான முயற்சியில் தான் பலரும் தோற்றுப் போகிறார்கள்.
இருந்தாலும் உங்களது குறிக்கோள்களை, முயற்சிகளை மட்டும் கைவிடாதீர்கள்...
🟡 நீங்கள் கண்ட குறிக்கோள் கனவை அடைய எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருங்கள். கனவில் இருந்து தான் சிந்தனை பிறக்கும். உங்கள் சிந்தனை தான் செயல்களாகும்...
🔴 உங்கள் குறிக்கோள் கனவை படிப்படியாக நடைமுறைப்படுத்துதலே வெற்றியாகும். மற்றவர்களை வெற்றி பெறச் செய்து நாமும் வெற்றி பெற வேண்டும் என்றால் நம் கனவு மெய்ப்பட வேண்டும்...!!
⚫ உங்களின் வெற்றி முகவரி இன்னொருவருக்குச் செல்லாமல் இருக்க வேண்டுமானால், உங்களின் கனவை இன்றே நனவாக்கும் முயற்சியைத் தொடங்குங்கள்...!!