FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 22, 2025, 02:38:05 PM
-
மெல்ல நகர்கிறது
மனிதர்களை போல
கனவுகளை மெல்ல சுமந்து
கம்பளிப்பூச்சி
அதற்கு இலைதான்
உலகம்
நமக்கோ உலகமே
விரல்நுனியில் இருந்தும்
ஆசை தீரவில்லை
பொறுமையாக, அமைதியாக
இலட்சியத்தை நோக்கி அதன்
பயணம்
ஓர் நாள் தன்னையே மூடிக்கொள்கிறது
கர்ப்பத்தின் உள்ளில் இருக்கும்
குழந்தை போல
சிறுது காலத்தில்
வெளிவருகிறது
அழகிய
வண்ணங்கள் கொண்ட
வண்ணத்துப்பூச்சி யாக
குழந்தைகளும் அப்படியே
பள்ளிப்பருவத்தில் கற்ற
நல்ல நல்ல விஷயங்களால்
தன்னை செதுக்கிக்கொண்டு
தீயவர்களிடமிருந்து
தன்னை தற்காத்துக்கொண்டு
வாழ்ந்தால்
பிறரை மகிழ்விக்கும்
அழகிய பட்டாம்பூச்சிபோல்
அழகிய எதிர்காலம்
நமக்காய் காத்திருக்கும்
****JOKER****