FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Luminous on December 20, 2025, 10:54:34 PM
-
ஆனந்தம்
என்னை உயர்த்திய தருணம்,
என் கவிதை
மேடையைத் தேடிய நேரம்.
இறுதி நொடியில்
சட்டம் சொன்னது
ஒரு “இல்லை”.
அது
என் திறமைக்கு அல்ல,
என் நேரத்திற்கான
ஒரு நிறுத்தக் குறி.
தெரியாத விதி
என் குற்றமல்ல,
கற்றுக் கொள்ளும்
ஒரு பாதை.
இந்த வலி
என்னை உடைத்திருக்கும்
அப்படித்தான் நினைத்தேன்.
ஆனால்
“எதிர்மறை வேண்டாம்”
என்று
என் தோழன் சொன்ன
அக்கறை,
என் எண்ணத்தை
திருப்பியது.
இப்போது
இந்த வலி
முடிவல்ல,
மெருகேற்றும்
ஒரு தொடக்கம்.
ஒருநாள்
இதே மேடை
என் கவிதையை
அழைக்கும்
என்று
நான் நம்புகிறேன்.
LUMINOUS 😇✌
-
🔥🔥 நல்ல படைப்புக்கு அங்கிகாரம் மேடை ஏறுவது மட்டுமல்ல... பதிய வைக்கும் தளமும் கூட....🔥🔥
தங்கள் அழகிய ஆழமான கவிப்பணி தொடர்க என் அன்பு தோழி ❤️❤️❤️
மூன்று வாரத்திற்கு ஒரு முறை பகிரப்படும் வாய்ப்பு பல அற்புதமான கவிஞர்களையும் அவரின் படைப்புகளையும் உருவாக்கும் அழகிய யுத்தி 👏👏
-
தோழி Luminous
கவிதை மேடயில் கவிதை ஒலிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் அது தகுதி இல்லாததால் இல்லை, அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஒரு நியாயமான விதியால் மட்டும் தான்.
அந்த விதி உங்கள் எழுத்தின் ஒளியை குறைக்கவே இல்லை 🌟 குறைக்கவும் முடியாது.
பண்பலை நிகழ்ச்சி ஒரு *ஒரு மணி நேர நிகழ்வு*, ஆனால் இங்கே பொதுமன்றத்தில் எழுதும் கவிதைகள், ஒவ்வொரு வார்த்தைகளுமே கூட
நேரத்தைத் தாண்டி வாழும்.
இன்று படிக்காதவரும் நாளை படிப்பார்,
இன்னும் பல நாள்களுக்கு பிறகும்
யாரோ ஒருவரின் மனதை அது தொட்டு கொண்டே இருக்கும்.
நீங்கள் எழுதியது கேட்கப்படவில்லை என்று நினைக்க வேண்டாம். உங்கள் கவிதை எப்பொழுதும் படிக்கப்படுறது, உணரப்படுகிறது, மனதில் சேமிக்கப்படுகிறது. அது உங்களின் உண்மையான வெற்றி 🤍
தொடர்ந்து எழுதுங்கள். எழுத்துக்கு ஓய்வு கிடையாது. 💫
-
So sweet of u sistaa💜🧡💛💚🙏