FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Luminous on December 13, 2025, 09:48:05 PM

Title: கேள்விகளுக்குள் தலைவர்🤴
Post by: Luminous on December 13, 2025, 09:48:05 PM
ஒரு விஷயம் தெரியாது என்றால்,
“எனக்குத் தெரியாது” என்று
கேட்கப்பட்டபோதுதான் சொல்வோர்
ஒரு வகை மனிதர்கள்.

ஆனால்,
கேட்கப்பட்டதாலல்ல.....
ஒரு கேள்வி பொதுவாக எழுந்தாலே,
தனக்குத் தெரிந்த பதிலை
தன்னிச்சையாகப் பகிர்வோர்
வேறொரு வகை.

அவர்களே
தலைமைக்கான தகுதியைப்
புத்தகங்களில் அல்ல,
பண்புகளில் சுமந்தவர்கள்.

நாடு என்ற எல்லையிலோ,
வீடு என்ற வட்டத்திலோ
அவர்களின் தலைமை சுருங்குவதில்லை.
நாம் நிற்கும் எந்த இடமாயினும்,
அங்கேயே
பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்
மனநிலையில்தான்
அவர்கள் தலைவர்களாகிறார்கள்.

பதவி அல்ல அவர்களை உயர்த்துவது,
பொறுப்பே அவர்களை உருவாக்குகிறது.
அதிகாரம் அல்ல,
அறிவைப் பகிரும் தைரியமே
அவர்களின் அடையாளம்.
LUMINOUS 💯✌💗🙋‍♀️