FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Luminous on December 13, 2025, 08:17:03 PM
-
கவிதை எழுதத் தெரிந்தது
எனக்கு பெருமையல்ல
அதை
எங்கு பதிய வேண்டும் என்று
தெரியாமல் இருந்ததே
என் மௌனப் போராட்டம்.
இப்போது,
எங்கு பதிய வேண்டும் என்பதை
கற்றுக்கொண்டேன்.
அதனால்
நான் பதியும் இடம்
கவிதையின் தளமாக மாறினால்,
அது ஆணவமல்ல.
அது
தேர்ந்தெடுத்த உயரமல்ல
வீழ்ந்துகொண்டே
அளந்த ஆழம்.
சிலருக்கது
சிறு ஆணவமாகத் தோன்றலாம்
ஆனால்
அடி சருக்கும் என்று
தெரிந்தபடியே
நான் முன்னே வைக்கிறேன் என் பாதங்களை.
ஏனெனில்,
வீழ்வதற்குப் பயந்தவன்
கவிதை எழுதமாட்டான்
வீழ்ந்தபின்பும்
எழுந்து நிற்பவனே
கவிதையாய் மாறுவான்.
இது ஆணவமல்ல,
முயற்சியின்
அடையாளம்.
LUMINOUS 💗✌💯
-
தன்னம்பிக்கை கொண்ட படைப்புகள் யாவும்
உன்னத கலையின் அடையாளமே
உங்கள் கவிப் பயணம் தொடரட்டும்
-
வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள் சகோ
-
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் சகோ! தொடர்ந்து எழுதுங்கள்