FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: RajKumar on December 07, 2025, 05:38:00 PM

Title: சம்மணமிட்டு உட்காரும் நல்ல பழக்கம்
Post by: RajKumar on December 07, 2025, 05:38:00 PM
(https://i.postimg.cc/MKvrPfLb/IMG-20251207-WA0019.jpg) (https://postimages.org/)
நாம் அமரும் முறையில் இருக்கிறது,

நம் ஆயுளும், ஆரோக்கியமும்.

*ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரிய வேண்டு மெனில்.? அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது ! கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல் தரையில், கையோ ! காலோ ! ஊன்றாமல்.? எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு நூறு!*


*ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து எழ வைத்து ஆய்வு செய்தார்கள்*

*கை,முட்டி,என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு!*

*ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு,இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு*

*இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு..,அதன்பின் அவர்களை ஆண்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் ? தெரிந்த விஷயம்!*

*பாயிண்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான்*

*கீழே சம்மணம் போட்டு உட்காருவது.? யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது*

*இந்தியா,சீனா,ஜப்பான்.,என கிழக்காசிய நாடுகள் எங்கிலும் ? சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள்*

*செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கு காரணம்.? வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான்*

*கீழே உட்காருவது நாகரீகக் குறைவு என கருதி.,ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா,சேர்களை,வாங்கி முதுகுவலி,மூட்டுவலியை,விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம்*

*சோபா,சேரில்,நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால்,முதலில் வருவது கால் மரத்து போன உணர்வு.*

*அடுத்து பின்புற வலி காரணம் ? சோபாவில் உட்காருவதால், பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது. பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான், முதுகுவலி,மூட்டுவலி, என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.!*

*கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில், வயதானவர்கள் கீழே விழுந்து கையை, காலை, முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும்,இல்லைஎன்கின்றன,ஆய்வுகள்.*

*காரணம் அவர்கள் வாழ்வதே தரையில் தான்*

*கீழே படுத்து உட்கார்ந்து எழும் அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும் எலும்புகளும் அத்தனை வலுவாகி விடுகின்றன.*

*ஆனால் சோபா மெத்தையில் படுத்து பாதம்மட்டுமே,தரையில்படும்படி வாழும் நாகரீக சமூக முதியவர்களுக்கு வயதான பின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் கீழே விழுவதுதான்*

*ஆஸ்டியோ பெரோசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் உட்கார்வதால் வருகின்றன...என சொல்லுகின்றன ஆய்வுகள்*

*சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும் பழங்குவதும் நம் ஆயுளைகூட்டி,முதுகுத்தண்டு,குறைபாடுகளை போக்கி பின்புறத்தையும், முதுகுத் தண்டையும்,மூட்டையும், வலுவாக்குகின்றன*

*அதனால் இதுநாள் வரை கீழே உட்கார்ந்தது இல்லை எனில்.? இனி உட்கார்ந்து பழகுங்கள்.*

*அப்படி உட்கார்கையில் முட்டி அந்தரத்தில் தொங்குவது போல உயரமாக இருந்தால், அவ்வபோது கையை வைத்து மெதுவாக கீழே அமுக்கி விடுங்கள்*

*இது காலின் அடக்டர் (Adductor Muscle) தசைகளை பிளெக்சிபிள்(Flexible) ஆக்கி போஸ்டர் (Posture) சரி செய்யும்!*

சம்மணமிட்டு அமர்வதையும், உணவு உண்பதையும், நம் நல்ல பழக்கமாக்கி, நம் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்வோம். இதற்கு வேறு எந்த உபகரணமோ, பணமோ, பயிற்சியோ கூடுதல் நேரமோ தேவை இல்லை, நாம் மனதில் நிறுத்தி கீழே சம்மணமிட்டு அமரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மட்டும் போதும்.....