FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on November 27, 2025, 12:19:45 AM

Title: எனக்குள் அவள்
Post by: joker on November 27, 2025, 12:19:45 AM
ஓர் நாள்
வார்த்தைப் போரில்
என் உள்ளத்தை கைப்பற்றியவள்

விருப்பமான இசை போல
என் நெஞ்சில்
பதிந்தவள்

அன்பின்
கைவண்ணத்தில் எனக்காய்
புதிய வானத்தை வரைந்தவள்

இதயத்தின் தீபத்தில்
ஒளியாய் பிரகாசிப்பவள்

எனக்குள் அலைபாய்ந்து
கரையாக நின்றவள்

எனக்குள் ஒரு உலகை
கண்டவள்

மனம் எந்நிலையில் எரிந்தாலும்
குளிர்விக்கும் நினைவுகளை தந்தவள்
 அவள்

எந்த வலியிலும்
அணைத்து ஆற்றும் அவள்
பேச்சு

பகலில் நிழலாய்
இரவில் நிலவாய்
என்னுள்
ஓடும் நதி அவள்

சிறுக சிறுக என்னை
அவளாக  மாற்றி செதுக்கும்
சிற்பி அவள்

நான் வேறு அவள் வேறு அல்ல
எனக்குள் அவள்


***Joker***