FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: RajKumar on October 31, 2025, 11:12:57 AM
-
*வாய்ப்புண், வயிற்று புண்ணுக்குகளுக்கு இயற்கை வைத்தியம்...*
*கோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.*
*கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.*
*கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.*
*வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். இலை மற்றும் தண்டு &கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.*
*கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.
-
நெல்லிக்காயின் மகத்துவம்
பச்சை நெல்லிக்காயை இடித்து பத்து மில்லிக்கு குறையாமல் சாறு பிழிந்து
இதனோடு இதில் பாதி அளவு
எலுமிச்சை சாறு இதனுடன் கலந்து
எலுமிச்சை சாற்றின் அளவில் பாதியளவு தேன் கலந்து இதை தினந்தோறும் காலை வேலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் பருகி வந்தால் எந்த வைத்திய முறைக்கும் கட்டுப்படாத நாட்பட்ட சர்க்கரை நோயானது வெகு எளிதாக கட்டுப்படும்
இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இந்த நெல்லிக்காய் சாற்றினை பருகி வர சர்க்கரையின் அளவு எப்போதும் சமநிலையில் இருக்கும்
நெல்லிக்காய் சாற்றினை பருகி வருவதால் கிடைக்கின்ற பயன்கள்
உடல் வெட்டைச்சூடு தணியும்
நல்ல ரத்தம் உற்பத்தியாகும்
விந்து ஸ்கலிதம் குணமாகும்
விந்து உற்பத்தி அதிகரிக்கும்
பார்வைத் திறன் உண்டாகும்
மனதில் ஏற்படும் பயம் விலகும் மனோதிடம் ஏற்படும்
உடல் வறட்சியை நீக்கி உடல் வெப்பத்தை தணிக்கும் அதிக தாகம் குணமாகும்
பித்த வாந்தி மற்றும் ரத்த வாந்தி நிவர்த்தியாகும் தலை மயக்கம் நீங்கும்
நுரையீரலுக்கு வலிமை ஏற்படும் கல்லீரல் மற்றும் மண்ணீரல் பலம் பெறும் ரத்தம் சுத்தமாகும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் இதன் மூலம் சுவாச மண்டலம் சீராக இயங்கும்
எந்தவிதமான நோய்க்கிருமிகளும் சுவாசப் பாதையில் தொற்றாத வண்ணம் நமது உடலை காக்கும்
உடல் பிணிகள் அனைத்தையும் நீக்கி உடலில் நோய் வராமல் காக்கும்
ஒரு உன்னத மருத்துவம் இது
பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் இருந்பது கிராம் நெல்லி வற்றலை இடித்து இருநூறு மில்லி தண்ணீரில் கலந்து இதை ஐம்பது மில்லியாக சுண்டக் காய்ச்சி இதில் பத்து மில்லி எலுமிச்சை சாறும் ஒரு ஸ்பூன் தேனும் கலந்து பருகி வந்தால் மேலே சொன்ன அனைத்து நோய்களும் நீங்கும்.
-
*முதுகு வலி: எளிய தீர்வுகள்!*
நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.
ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.
எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை,
* 1. உட்காரும் தோரணை*
அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.
வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.
* 2. உடற்பயிற்சி*
கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.
அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.
* 3.உணவு முறை*
பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.
* 4. வைட்டமின்கள்*
கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.
* 5. தாதுக்கள்*
எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.
* 6. சூடான குளியல்*
வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.
* 7. சப்ளிமென்ட்ஸ்* நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.
*8. மசாஜ்*
வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.
* 9. கடுகு எண்ணெய்*
எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.
* 10.ஆரோகியமான சூழ்நிலை*
சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.
-
*வாய்வு பிரச்சனை* *"எப்படி உருவாகிறது*
வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிற்றில் அழுத்தம், வீக்கம் என்பது பொதுவான ஒரு இரைப்பை குடல் நோய் அறிகுறியாகும். வயிற்றில் உள்ள அமிலச் சுரப்பு அதிகரிக்கும் போது குடலில் உள்ள வாய்வுவின் அழுத்தமும் அதிகரித்து வாய்வுப் பிரச்சனை, வயிற்றுப் பொருமல் ஏற்படுகிறது. காரணங்கள்: உணவை நன்றாக மென்று சாப்பிடாமல் அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும் போது, நம்மை அறியாமலே காற்றையும் விழுங்கி விடுகிறோம். குடலில் உணவு செரிக்கும் போது, அங்கு இயல்பாகவே இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நொதித்தல் செயல் மூலம் வேதி மாற்றங்களை நிகழ்த்தும் போது ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் போன்ற பல வாயுக்கள் உற்பத்தியாகின்றன. தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியே வெளியேறுகிறது. .சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவில் தான் வாயு இருக்கும். இவை ஏப்பம் மூலமாக வாய் வழியாக அல்லது ஆசனவாய் வழியாக வெளியேறி விடும். சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால் குடலில் 'பெப்சின்' போன்ற என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, மெர்காப்டன் போன்ற வாயுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது. பொதுவாக வயிற்றிலுள்ள ஹைட்ரஜனும், மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் சத்தமே இல்லாமல் வாயு வெளியேறும். ஆனால் இந்த கலவை அதிகமாகிவிட்டால் பக்கத்தில் உள்ளவர்கள் அதிரும் படியான சத்தம் கேட்கும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை.
*தீர்வுகள்*
:மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் இவைகளை வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் அளவோடு எடுப்பது நல்லது.
தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சீரகம் உடலின் அக உறுப்புகளை சீராக்கி, உடலைப் பலப்படுத்தும். சீரகத் தண்ணீர் தினமும் காலை, மாலை வேளைகளில் இளஞ்சூட்டில் குடித்து வந்தால் வாயுப் பிரச்சினை குறையும்.
சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல், சுண்டை வற்றல் இவைகளை வறுத்து பொடித்து வைத்து, தேவையானபோது சுடு சோற்றில் உப்பு சேர்த்து நெய் விட்டு சாப்பிட வாயுப் பிரச்சினை நீங்கும்.
மோரில் வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம்.வயிற்றுப் பொருமலுக்கு ஓமத் தண்ணீர் ஒரு அருமருந்து, பெரியவர்கள் 5-10 மி.லி. சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.
பழைய சாதத்தில் சின்ன வெங்காயம், இஞ்சித் துண்டு, மோர், கறிவேப்பிலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கு, நன்மை பயக்கும் பாக்டீரியாக்களான லேக்டோபேசில்லஸ், பிபிடோபாக்டீரியா, சக்காரோமைசஸ் இவைகள் சீரான அளவில் குடலில் இருந்து ஏராளமான நன்மைகள் செய்யும்.தண்ணீரை அண்ணாந்து குடிக்காமல் உதட்டில் வைத்து குடிக்க வேண்டும். உணவை அவசரப்படாமல் நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
இவைகளை முறையாக எடுத்து வந்தால் செரிமான மண்டல பிரச்சினைகள் சீராகி, வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் நீங்கும், மலச்சிக்கல் இராது.
-
*தொல்லை தரும் வயிற்றுப்புண்*
அல்சர் எனப்படும் குடல் புண்ணால் இன்றைய காலகட்டத்தில் பலரும் அவஸ்தைப்படுகின்றனர்.
இதனால் சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக்குழியிலேயே நிற்பது போல உணர்வு ஏற்படும்.
நெஞ்செரிச்சலும், புளித்த ஏப்பமும் அடிக்கடி வந்து தொந்தரவை ஏற்படுத்தும்.
வாய்க்கு ருசியாக காரமாகவோ, புளிப்பாகவோ எதையும் சாப்பிட முடியாத நிலை, கொஞ்சம் சாப்பிட்டால் கூட புளித்த ஏப்பம் என அல்சர் வாட்டியெடுத்துவிடும்.
சாப்பிட வேண்டிய நேரத்தில் சரியாகச் சாப்பிடாமல் விடுவதும், துரித உணவு, எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள், காபி, டீ அதிகம் அருந்துவது போன்றவையும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன.
அதேபோல் அதிக டென்ஷன், மனஅழுத்தம் போன்றவையும் அல்சர் ஏற்படக் காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மனஅழுத்தத்தால்
ஒரு சிலருக்கு பாரம்பரிய ரீதியிலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், அதிக உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் காரணமாகவும் அல்சர் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டென்ஷன் ஏற்படும்போது குடலில் அமிலம் அதிகமாகச் சுரக்கிறது, இதுவும் அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகிறது.
மருந்தின் வீரியத்தால்
சாதாரணமாக ஏற்படும் தலைவலி, காய்ச்சல் என்றால் தாங்களாகவே மருந்தகங்களுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். இவ்வாறு அடிக்கடி மாத்திரை சாப்பிடுவது ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள்.
அதேபோல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் போன்ற மாத்திரைகள் உட்கொள்வதும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. ஏனெனில், ஆன்டிபயாடிக் உட்கொள்ளும்போது மருத்துவர்கள் தரும் பி.காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளை உட்கொள்வதும் அவசியம்.
எண்ணெய் பலகாரங்கள் கூடாது
வயிற்றுப்புண் ஏற்பட்டவர்கள் ஸ்ட்ராங்கான காபி, டீயை குடிக்கக் கூடாது. அதேபோல் அதிகமான இனிப்புகள், பொரித்த உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சைக் காய்கறிகள்(வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, மசாலா, காரமான குழம்பு இவற்றை அறவே தவிர்க்கவேண்டும்.
தவிர்க்கும் பட்சத்தில்
எந்தக் காரணத்தையும் கொண்டு உணவை தவிர்க்க கூடாது, சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளுதல் அவசியம்.
மேலும், அல்சர் உள்ளவர்கள் எளிதில் ஜீரணமாகும் வகையிலான உணவுகளை உட்கொள்ளவேண்டும்.
அல்சர் வந்தவர்களுக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. மூன்று வேளையும் மூக்கைப் பிடிக்க சாப்பிடாமல், கொஞ்சமாக, அடிக்கடி சாப்பிடலாம்.
எதையும் நன்கு கடித்து, மென்று பொறுமையாக சாப்பிட வேண்டும்.
குழைய வேகவைத்த அரிசிச் சாதம், அவல் பொரியில் கஞ்சி போன்றவை செய்து சாப்பிடலாம்.
கீரை, காய்கறிகளைக்கூட நன்றாக வேகவைத்து மசித்துச் சாப்பிட வேண்டும், பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
உணவு உட்கொண்ட உடனே படுக்கைக்குச் செல்லக்கூடாது, ஏனெனில் அது நெஞ்செரிச்சல் ஏற்பட வழிவகுக்கும்.
எனவே சாப்பிட்டபின் மூன்று மணி நேரம் கழித்தே உறங்கவேண்டும். நேரம் கெட்ட நேரத்தில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது அவதியை அளிக்கும்.
பொதுவாக, வயிற்றுப்புண் உள்ளவர்கள், தங்கள் குடலை கண்ணும் கருத்துமாகக் காத்துக்கொள்ள வேண்டும்.
-
*திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்*
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இரத்த உறைதலை கட்டுப்படுத்துகிறது, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளன, உடல் எடை இழக்க உதவுகிறது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, மேலும் செரிமானத்திற்கும் உதவுகிறது.
திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Eating Grapes):
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது (Increases Immunity):
திராட்சையில் வைட்டமின் சி மற்றும் பிற சத்துக்கள் உள்ளன, இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
இரத்த உறைதலைக் கட்டுப்படுத்துகிறது (Regulates Blood Clotting):
திராட்சையில் உள்ள சில பொருட்கள் இரத்த உறைதலை கட்டுப்படுத்த உதவுகின்றன.
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants that fight cancer):
திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
எடை இழப்புக்கு உதவுகிறது (Helps in Weight Loss):
திராட்சையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடை இழக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது (Improves Skin Health):
-
#சிறுநீரக கல் முதல் #உமிழ்நீர் கல் வரை எப்படி உருவாகிறது? வராமல் தடுப்பது எப்படி?.
1. சிறுநீரக கற்கள்
2. கற்கள் எப்போது பிரச்னையாக மாறுகிறது?
3. கல் உருவாவதற்கான பிற காரணங்கள்
4. டான்சில் கற்கள்
5. கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
6. கற்கள் தொடர்பான பிரச்னை இருந்தால் என்ன செய்வது?
மனித உடலின் பல அற்புதமான திறன்களில், கற்களை உற்பத்தி செய்யும் திறனை விசித்திரமான ஒன்று எனக் கூறலாம். சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பை கற்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்க கூடும்.
ஆனால் அவற்றைத் தவிர்த்து, உடலில் வேறு கற்களும் உருவாகலாம். யாரும் நினைத்துக் கூடப் பார்க்காத உடலின் பாகங்களில் அவை இருக்கலாம்.
உடலில் உருவாகும் இந்த கற்கள் எதனால் ஆனவை? இவை உருவாகாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?
சிறுநீரக கற்கள்
உலகில் பத்தில் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்னை உள்ளது. இரத்தத்தில் இருந்து சிறுநீரில் கால்சியம் மற்றும் ஆக்சலேட் கசிவதால் இது ஏற்படுகிறது. ஆக்சலேட்டுகள் என்பவை தாவரங்கள் மற்றும் மனிதர்கள் இரண்டிலும் காணப்படும் இயற்கை சேர்மங்கள் ஆகும்.
அதிக அளவு கால்சியம் மற்றும் ஆக்சலேட் கசிவு காரணமாக, அவை திட நிலையை அடைந்து, ஒரு கல் வடிவத்தைப் பெறும். சிறுநீரக கற்களின் அளவும் மாறுபடலாம். இவை ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அகலத்திலிருந்து ஒரு சென்டிமீட்டர் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.
கற்கள் அசாதாரண வடிவத்திலும் இருக்கலாம். ஆனால் சிறுநீரக கால்வாயின் (calyces) கிளைகளுக்குள் கற்கள் உருவாகத் தொடங்கினால், அது மானின் கொம்பு வடிவத்தையும் பெறலாம். இது ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் (staghorn calculus) என்று அழைக்கப்படுகிறது.
கற்கள் எப்போது பிரச்னையாக மாறுகிறது?
சிறுநீரக கற்கள், சிறுநீர்க் குழாய்களின் பாதையைத் தடுக்கும் போது பிரச்னை ஏற்படலாம். அதாவது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரை எடுத்துச் செல்லும் இரண்டு குழாய்களில் ஏதேனும் ஒன்றைத் தடுக்கும்போது இது நடக்கலாம்.
இதனால், சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், கீழ் முதுகில் கடுமையான வலியையும் பாதிக்கப்பட்ட நபர் அனுபவிக்கலாம்.
இதன் காரணமாக, சிறுநீரகத்தைச் சுற்றி சிறுநீர் குவியத் தொடங்குகிறது அல்லது சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
பித்தப்பையில் கற்கள் உருவாவதும் ஒரு பிரச்னையாகும், இவை பித்தப்பை கற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பித்தப்பையில் இருந்து குடலுக்கு பித்தநீரைச் எடுத்துச் செல்லும் குழாய்களில் அல்லது பித்தப்பைக்குள் இந்த கற்கள் உருவாகின்றன.
பித்தநீரில் உள்ள கொழுப்பு அல்லது நிறமிகள் காரணமாக பித்தப்பை கற்கள் உருவாகலாம். அவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கலாம்.
சிறுநீரக கற்களைப் போலவே, பித்தப்பைக்குள் (பித்த நாளம் போன்றவை) ஒரு குறுகிய இடத்தில் பித்தப்பைக் கற்கள் சென்றால், அவை வயிற்று வலி, தொற்று மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
கல் உருவாவதற்கான பிற காரணங்கள்
இவை தவிர, வெவ்வேறு உடல் திரவங்களாலும் கற்கள் உருவாகலாம். உதாரணமாக, உமிழ்நீர் கற்கள் அதாவது உமிழ்நீரில் உள்ள கற்கள்.
காதுகள், தாடை மற்றும் நாக்கின் கீழ் உள்ள சுரப்பிகளால் உமிழ்நீர் உற்பத்தி செய்யப்படுகிறது. உமிழ்நீர் வாய்க்குள் விழுந்த பிறகு, உணவை ஈரமாக்கி, ஜீரணமாக்கும் செயல்பாட்டில் அது பெரும் பங்கு வகிக்கிறது.
கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் போன்ற பல்வேறு தனிமங்களில் இருந்து உமிழ்நீர் கற்கள் உருவாகலாம். உமிழ்நீர் வாய்க்கு வரும் குழாயில், உமிழ்நீர் கல் உருவானாலோ அல்லது சிக்கிக்கொண்டாலோ, அது வாயில் உமிழ்நீர் விழுவதை நிறுத்தலாம்.
இது நடந்தால், ஒரு நபருக்கு கடுமையான வலி மற்றும் வாயில் வீக்கம் ஏற்படலாம். உமிழ்நீர் நின்றுவிடுவதால் உமிழ்நீர் சுரப்பியில் தொற்று ஏற்பட்டால், அது வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதற்கும் வழிவகுக்கும்.
டான்சில் கற்கள்
இது தவிர டான்சில்களிலும் கற்கள் காணப்படும்.
தொண்டையின் அடிப்பகுதியிலும் பின்புறத்திலும் டான்சில் சுரப்பிகள் அல்லது அடிநாவு சுரப்பிகள் அமைந்துள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் லிம்பாய்டு திசுக்களின் குழுக்கள். ஆனால் அவை மீண்டும்மீண்டும் வீக்கமடைந்து நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம் என்பது தான் நகைமுரண்.
டான்சிலில் க்ரிப்ட்ஸ் (Crypts) என்று அழைக்கப்படும் குழிவுகள் (Cavities) உள்ளன. சில நேரங்களில் இவை உணவு மற்றும் உமிழ்நீரைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இதனால் டான்சில் கற்கள் அல்லது டான்சிலோலித்ஸ் உருவாகும்.
இந்த கற்கள் முதலில் மென்மையாக இருக்கும், ஆனால் காலப்போக்கில் அவை கடினமாகிவிடும். இதன் காரணமாக, வாய் துர்நாற்றம் மற்றும் அடிக்கடி தொற்றுநோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இவை மட்டுமல்லாது உடலில் உள்ள வேறு சில பொருட்கள் கெட்டியாகி கற்களாக மாறிவிடக்கூடும். உதாரணமாக, சில சந்தர்ப்பங்களில், மனித மலம் அவ்வாறு மாறக்கூடும். அத்தகைய நிலை கொப்ரோலைட் (coprolite) என்று அழைக்கப்படுகிறது.
இது தவிர தொப்புளில் சேரும் தோல் பகுதிகளும் கெட்டியாகி கற்கள் போல் ஆகிவிடும். இந்த கற்கள் ஓம்பலோலித்ஸ் (omphalolyths) என்று அழைக்கப்படுகின்றன.
கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சில எளிய முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தும் கற்களைத் தவிர்க்கலாம்.
இவற்றில் மிக முக்கியமான விஷயம் உடலில் சரியான அளவு தண்ணீர் இருக்க வேண்டும். சரியான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரை நீர்த்துப்போகச் செய்கிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் வாயில் பாக்டீரியாக்கள் உருவாகாமல் தடுக்கிறது.
இந்த முறையால் உடலில் பல வகையான கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
டான்சில் கற்களைத் தவிர்க்க, வாயை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். வழக்கமான பல் துலக்குதல் மூலம் அதன் ஆபத்தை குறைக்கலாம்.
இவை தவிர, உணவுமுறையும் முக்கியமானது, குறிப்பாக பித்தப்பைக் கற்களுக்கு. கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் உடல் பருமனும் உடலில் கற்களை ஏற்படுத்தலாம்.
ஆனால் நீங்கள் விரும்பினாலும் கூட தவிர்க்க முடியாத பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, பித்தப்பையில் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
பால் பொருட்கள், கீரை வகைகள் போன்ற கால்சியம் மற்றும் ஆக்சலேட் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்க உதவும்.
கற்கள் தொடர்பான பிரச்னை இருந்தால் என்ன செய்வது?
ஏற்கனவே ஒருவருக்கு உடலில் கற்கள் இருந்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. கற்கள் காரணமாக ஒருவருக்கு உடல்நிலை மோசமடைந்தால், எண்டோஸ்கோபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் கற்களை அகற்ற வேண்டியிருக்கும்.
சிறுநீரகக் கல் ஏற்பட்டால், சிறுநீரகக் குழாய் வழியாக கல் சிறுநீர்ப்பையை அடைந்து உடலில் இருந்து வெளியேறும் வரை காத்திருக்கலாம்.
சில சமயங்களில், சிறுநீர்ப்பையில் இருந்து ஒரு கல் வெளியேறும் போது, மடுவில் கல் தாக்குவதால் மெல்லிய சத்தம் உண்டாகும்.
கற்களைப் பிடிக்க சிறுநீர் கழிக்கும் போது தேநீர் வடிகட்டியைப் பயன்படுத்தும்படி உங்கள் மருத்துவர் உங்களிடம் சொல்லலாம்.
உமிழ்நீர் கற்கள் பிரச்னையைப் பொருத்தவரை, சில சமயங்களில் எலுமிச்சையை உறிஞ்சுவது கூட நிவாரணமாக இருக்கும். உமிழ்நீர் உருவாகும் செயல்முறையை எலுமிச்சை அதிகரிக்கும். அதிக உமிழ்நீர் ஒரே நேரத்தில் உமிழ்நீர் குழாயில் வழியாக வரும் போது கல் தானாகவே வெளியேறிவிடும்.
இதுபோல பல்வேறு வகையான கற்களுக்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் உள்ளன. ஆனால் எளிய அன்றாட நடவடிக்கைகளும் அவை உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும்.
-
*சளித்தொல்லை_குணமாக…*
பருவநிலை அடிக்கடி மாறி வருவதால் பலரும் சளித்தொல்லையினால் அவதிப்பட்டு வருவார்கள். சளி தொல்லை சிறியதாக இருந்தாலும் நமக்கு ஒருவித அசௌகரியத்தை தருகிறது.
👉சளி பிடித்தால் உடனே………
★தொண்டை வலி,
★தலைவலி
ஆகியவை சேர்ந்தே வரும். இத்தகைய சளித்தொல்லையிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றி பார்ப்போம்.
#சூடான_இஞ்சி_டீ
சளி பிடித்து இருக்கும் போது சற்று சூடான பானங்களை குடித்தால், நன்றாக இருக்கும். இஞ்சி சளித்தொல்லையை நீக்க வல்லது.
தேவையானவைகள்
▶️6-8 டேபிள் ஸ்பூன் புதிதாக துருவப்பட்ட இஞ்சி
▶️சிறிதளவு இலவங்கப்பட்டை (தேவைப்பட்டால்)
▶️எலுமிச்சை சாறு சிறிதளவு (தேவைப்பட்டால்)
▶️தேன் சிறிதளவு (தேவைப்பட்டால்)
▶️4 கப் சுடு தண்ணீர்
இந்த பொருட்களை சுடுதண்ணீரில் கலந்து 10 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். தேவைப்படும் போது சூடு செய்து தினமும் மூன்று முறை பருக வேண்டும்.
மஞ்சள்_பொடி_மற்றும்_சுண்ணாம்பு
தலையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.
மஞ்சளையும், வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். இதில் தேவைக்கு தகுந்தது போல நீர் சேர்த்துக்கொள்ளலாம்.
இதனை நெற்றியிலும் மூக்கிலும் தடவ வேண்டும்.
சுண்ணாம்பு சேர்ப்பதால் புண்ணாகிவிடுமோ என்ற கவலை வேண்டாம். மஞ்சள் புண்ணாவதை தடுக்கும். இதனை தடவிய பின் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.
#நெஞ்சு_சளி_நீங்க
நெஞ்சு சளி நீங்க தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவினால் நெஞ்சு சளி குணமாகும்.
#கொள்ளு_பயிற
கரைக்கவே முடியாத நெஞ்சு சளியை கரைக்க, கொள்ளு சூப் குடிப்பது சரியான தீர்வாக இருக்கும்.
தேன்
சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும் அப்படி உள்ளவர்கள், அடிக்கடி தேன் சாப்பிடலாம். தேனில் இருக்கும் விட்டமின் சி அடிக்கடி உண்டாகும் சளி தொல்லையிலிருந்து நம்மை காக்கும்.
மேலும்_சில_இதர_வழிகள்…
வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது.
இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம்.
இது ஒரு திரவ உணவு, சூடான சூப் வகையை சேர்ந்தது. இத சூப் உடல் சூடு மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பில் மிக சிறந்த பலன்களை கொடுக்க வல்லது.
#தேவையான_பொருட்கள்
▶️சீரகம் – 1/2 டீஸ்பூன்
▶️இஞ்சி – 1 துண்டு
▶️பட்டை – சிறிதளவு
▶️வெள்ளை பூண்டு – 10 பற்கள்
▶️மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
▶️தனியா – கிராம்பு – 7
▶️தண்ணீர் – 750 ml
▶️உப்பு – தேவையான அளவு
சூப் செய்முறை
குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும்.
பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும்.
10 நிமிடங்கள்
ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும். (குறிப்பு:- பிரஷர் குக்கர் உபயோகிக்க வில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 ml க்கு பதில் 1250 ml தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.)
சூப் ரெடி
பிறகு அந்த திரவத்தை தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும். பிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.
இந்த சூப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள்
மொத்த கலோரிகள்: 36 கலோரிகள்
மொத்த கொழுப்பு: 0.5 கிராம்
சாச்சுரேட்டட் கொழுப்பு: 01. கிராம்
சோடியம்: 603 mg
மொத்த கார்போ ஹைடிரேட்: 3%
சளித்_தொல்லை
இந்த சூப்பை காலை மாலை மற்றும் இரவு வேளைகளில் 3 நாட்களுக்கு பருகுவதால், உடல் வலி பறந்து போய் விடும். மிளகு, இஞ்சி போன்றவை சளி தொல்லைக்கு சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்து விடும்.
இந்த சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.
-
*சளி, சைனஸ் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் பிரமர முத்திரை...*
*செய்முறை*
ஆள்காட்டி விரலை மடக்கிக் கொண்டு, நடு விரல் நுனியைப் பெருவிரல் நுனியோடு அழுத்திப்பிடித்து,
மற்ற இரு விரல்களையும் நேராக வைக்கவும்.
இவ்வாறு தினமும் 15 முதல் 25 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
*பயன்கள்*
மனிதனது உடலில் உள்ள ஒவ்வாமை,
பயங்களைப் போக்கவல்ல அற்புத சக்தி கொண்டது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.
தொற்றுகள் ஏற்படும்போது வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படுகின்ற வயிற்றுக் கோளாறுகள்,
சளி, சைனஸ் போன்ற தொல்லைகளுக்கும் இது நிவாரணம் தரும்.
*சைனஸ்...*
மூக்கு, சைனஸ் (எலும்புக்குழிகள்), தொண்டை, சுவாசக்குழாய்கள், இவற்றின் உட்படை வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்டு உண்டாகும் தொற்று ஜலதோஷம்.
பல வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன. அவற்றில் முக்கியமானது ரைனோ வைரஸ் (Rhino virus). இதிலேயே நூறு வகை வைரஸ்கள் உள்ளன.
ரைனோ வைரஸ் தான் பெரும்பாலான ஜலதோஷத்திற்கு காரணம்.
மூக்கில் நுழைந்த வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்க 1 லிருந்து 30 எண்ணிக்கைகள் போதும். வைரஸ் பெருகி மூக்கின் பின் பக்கமாக, அடினாய்டுகளில் படியும். தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தோன்ற 1 லிருந்து 3 நாட்களாகும்.
உடலுக்குள் ஜலதோஷ வைரஸ்கள் நுழையும் வாசல் மூக்கு தான்.
கண்கள் வழியாகவும் கிருமிகள் நுழைந்து, கண்ணீரின் வடிகால்கள் வழியே மூக்கின் பின்பாகத்தை அடையும்.
ஜலதோஷம் வழக்கமாக வாட்டுவது 7 நாட்கள். சில சமயங்களில் 14 நாள்கள் வரை நீடிக்கும்.
சளி கெட்டியாக பச்சை நிறத்தில் ஒழுகினால், அதில் “இறந்த” வைரஸ், திசுக்கள், பாக்டீரியாக்கள் இருப்பதால், ஜலதோஷம் முடியப் போவதின் அறிகுறி.
முடிந்து விடாமல் தொடர்ந்தால் “சைனஸ்” தொற்றாக இருக்கலாம்.
ஒரு தடவை ஜலதோஷத்தால் தாக்கப்பட்டால் நோயாளி எந்த வைரஸ் தாக்கியதோ அதற்கு நோய் எதிர்ப்பு உடையவராகி விடுவார்.
விட்டமின் ‘சி’ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும் – குறிப்பாக குளிர்காலங்களில் காலையிலும், மாலையிலும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வரவும்.
ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்காமல் இருப்பது.
சிகிச்சை
ஜலதோஷத்திற்கு என்று தனிப்பட்ட மருந்து என்று ஏதும் கிடையாது
அறிகுறிகளின் உபாதையை குறைப்பதற்கும், சிக்கல்கள் வராமல் தடுக்க மட்டுமே மருந்துகள் தரப்படுகின்றன.
ஆன்டி – பையாடிக் மற்றும் ஆன்டி – வைரஸ் மருந்துகள் பலன் தராது தவிர இவற்றின் பக்க விளைவுகளும் அதிகம்.
*வீட்டு வைத்தியம்*
அடைபட்ட மூக்கை திறப்பதற்கு சிறந்த வழி ‘ஆவி பிடிப்பது’. ஒரு கிண்ணத்தில் கொதிக்கும் நீரை விட்டு, அதிலிருந்து எழும் நீராவியை நுகரவும். துவாலையால் முழு நீராவியும் முகத்தில் / மூக்கில் படுமாறு, தலையை மூடிக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் மூலிகைகள் போட்டு நுகரலாம். வெங்காயம் அல்லது பூண்டை நசுக்கி போடலாம்.
சுக்கு, மிளகு, துளசி போன்றவற்றை சமஅளவு எடுத்து டீ ’ போல பருகி வர ஜலதோஷம் விலகும். இதை தினம் (ஜலதோஷம் இருக்கும் போது) 2 (அ) 3 முறை எடுத்துக் கொள்ளலாம்.
காலையிலும், இரவும் சூடான பாலில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி, சிறிதளவு சுக்கு, மிளகு, திப்பிலி தூள்கள் சேர்த்து பருகி வர ஜலதோஷம் குறையும்.
வெறும் பால் + மஞ்சள்பொடி அல்லது நீர் + மஞ்சள் பொடி கூட போதுமானது. பாலில் குங்குமப் பூ சேர்த்து பருகினாலும் நல்லது.
மூக்கில் சளி கொட்டினால் வெற்றிலைச் சாற்றில் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். தும்மலும் குறையும்.
இஞ்சிப்பொடி, பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை – இவை ஒவ்வொன்றும் 1/2 தேக்கரண்டி எடுத்து, ஒரு சிட்டிகை கிராம்புப் பொடியுடன் சேர்த்து ஒரு கப் கொதி நீரில் இடவும். 10 நிமிடம் ஊறிய பின், வடிகட்டி நீரை குடிக்கவும். இதை தினம் 3 (அ) 4 தடவை குடிக்கலாம்.
நாம் வழக்கமாக பருகும் தேநீரில் 3 (அ) 4 துளிகள் இஞ்சிச் சாறு விட்டு குடிக்கலாம். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.
வெங்காயத்தின் ஒரு பெரிய துண்டை ஒரு கிண்ணத்தில் போட்டு, மிளகுப் பொடியை (ஒரு தேக்கரண்டி) தூவி இவற்றின் மேல் கொதிக்கும் நீரை விடவும். 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு இந்த நீரை இளம் சூட்டில் குடிக்கவும்.
சூடான அல்லது வெது வெதுப்பான நீரை அடிக்கடி குடிக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
இஞ்சி சாற்றுடன் சம அளவு தேன் கலந்து தினமும் 1/2 தேக்கரண்டி தினமும் இரு முறை எடுத்துக் கொள்ளலாம்.
துளசிச்சாறு + ஒரு கைப்பிடி ஆடாதொடை இலைகளின் சாறு தினமும் 1 தேக்கரண்டி வீதம் 3 நாட்களுக்கு சாப்பிடவும்.
ஆடாதொடை வேர் – 30 கிராம், துளசி இலைகள் 20 கிராம், சுக்கு 5 கிராமும் எடுத்து இவற்றை 1 லிட்டர் தண்ணீரில் காய்ச்சவும். கால் பாகமாக (250 மி.லி.) தண்ணீர் சுருங்கும் வரை காய்ச்சவும். இதில் 60 மி.லி. எடுத்து, தினம் 4 வேளை குடிக்கவும். இதை 3 நாட்கள் செய்யவும்.
அகஸ்திய ரசாயனம் – இதை இரண்டு வாரத்திற்கு உணவுக்கு பிறகு 1 தேக்கரண்டி அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
ஜலதோஷம் ஏற்பட்ட உடனேயே, விட்டமின் சி அதிக அளவு எடுத்துக் கொண்டால், ஜலதோஷத்தின் தீவிரம் குறையும். மறுபடியும் வருவதை தவிர்க்கலாம்.
-
"சுரைக்காய்க்கு உப்பில்லை"
யாராவது இருவர் பேசிக்கொண்டிருக்கும் போது புதிதாக அங்கு வரும் நபர் அவர்கள் பேச்சு புரியாது "அண்ணே என்ன சொன்னாரு" ன்னு கேட்டா
"ஓ...அதுவா சுரைக்காய்க்கு உப்பில்லையின்னு சொன்னார்ப்பா" ன்னு நக்கலாக சொல்வார்கள் .
அது உண்மையான வார்த்தை தான்.
ஆமாம் உண்மையிலேயே சுரைக்காய்க்கு உப்பு இல்லைங்க. உப்புநீர் உள்ளவர்கள் மற்றும் கை கால் வீக்கம் உள்ளவர்கள் சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் உப்பு நீர் குறைந்து கை கால் வீக்கம் வற்றிவிடும்.
பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும்போது உப்பு நீர் அதிகமாகி கால்கள் வீக்கமாகும். அப்போது தாராளமாக சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள கால் வீக்கம் வடியும்.
சிறுநீரகத்தை நன்கு இயங்க வைக்கும் ஆற்றல் கொண்டது சுரைக்காய். பித்த கோளாறையும் குணமாக்கும்.
-
*கொய்யாவின் நன்மைகள்*
எல்லா காய்கறிகளிலும் எண்ணற்ற பண்புகள் இருப்பதை நாம் அறிவோம், மேலும் சில நோய்களைக் குணப்படுத்தவும் உதவும்.
இது மத்திய அமெரிக்காவின் பழங்குடி மக்கள் ஏற்கனவே மிகவும் தெளிவாக இருந்த ஒன்று, ஏனென்றால் கொலம்பஸ் இந்த நிலங்களுக்கு வந்தபோதும் கூட ஒரு குழுவால் அவரைப் பெற்றார், இந்த அற்புதமான பழம் உட்பட கொய்யா உட்பட அவர்களின் மிக அருமையான பிரசாதங்களை அவருக்கு வழங்கினார்.
வைட்டமின் சி தான் இந்த பழத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது, இது "வைட்டமின் சி ராணி" என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றமானது நமது உயிரணுக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், நம் உடலை ஆக்ஸிஜனேற்றுவதற்கும், நோய்களுக்கு ஆளாகக்கூடிய பொருட்களின் நச்சு விளைவை எதிர்ப்பதற்கும் காரணமாகும்.
கொய்யாவில் உள்ள மற்ற வைட்டமின்கள் வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் இது பொட்டாசியம் போன்ற தாதுக்களையும் சேர்க்கிறது, இது நரம்பு பருப்புகளைப் பரப்புவதற்கு அவசியமானது, பிடிப்பைத் தவிர்க்கிறது மற்றும் மூளையின் செயல்பாட்டை வலுப்படுத்துகிறது. ஆனால், உங்கள் ஆரோக்கியத்தை இயற்கையாகவே மேம்படுத்த உதவும் கொய்யாவின் குறிப்பிட்ட நன்மைகளை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது: வைட்டமின் சி இன் உயர் உள்ளடக்கத்திற்கு நன்றி, கொய்யா உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டிய அவசியமாக இருக்கலாம், மேலும் இந்த வழியில் நோய்களை உருவாக்கும் வெளிப்புற முகவர்களிடமிருந்து இயற்கையாகவே உங்களைப் பாதுகாக்கும்.
புற்றுநோய் செல்களை நடுநிலையாக்குகிறது: மேலும் கொய்யா நுகர்வு மூலம் இலவச தீவிரவாதிகள், நோய் ஜெனரேட்டர்கள் குறைக்கப்படுகின்றன. புற்றுநோய் உயிரணுக்களின் பெருக்கத்தைத் தடுக்கும் வகையில் இது ஒரு நன்மை.
இதயத்திற்கு நன்மைகள்: இதய பிரச்சினைகள் மரண புள்ளிவிவரங்களில் உலகை வழிநடத்துகின்றன மற்றும் கொய்யா இலைகளில் அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களிலிருந்து இதயத்தைப் பாதுகாக்க உதவும் பண்புகள் உள்ளன. இது சர்க்கரை அளவை சீரானதாக வைத்திருக்க உதவுகிறது.
வாய்வழி ஆரோக்கியம்: கொய்யாவில் பாக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் உள்ளன, அவை பிளேக்கை அகற்றவும், ஈறு அழற்சி மற்றும் பிற வாய்வழி தொற்றுநோய்களைத் தடுக்கவும் உதவும். பல் வலி நிவாரணத்திற்கு உதவும் வலி நிவாரணி பண்புகளும் இதில் உள்ளன.
நீரிழிவு நோய்க்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும்: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீரானதாக வைத்திருக்க கொய்யா சாறு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இலைகளுடன் உட்செலுத்துதல்களை தயாரிக்கலாம் அல்லது பழத்தை நேரடியாக சாப்பிடலாம்.
கண்பார்வை மேம்படுத்துகிறது: கொய்யாவில் உள்ள அதிக அளவு வைட்டமின் ஏ உங்கள் கண்பார்வைக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அவை இரவு குருட்டுத்தன்மையைக் குறைக்கவும் விழித்திரை செல்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றன, மேலும் சிறந்த பார்வையை உறுதி செய்கின்றன.
சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது: மேலே குறிப்பிட்ட அதே ஆக்ஸிஜனேற்றிகள், சருமத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன, சுருக்கங்கள் மற்றும் முன்கூட்டிய வயதானதைத் தடுக்கின்றன.
வயிற்றுப்போக்குக்கு உதவுகிறது: கொய்யா செரிமான அமைப்புக்கு நன்மை அளிக்கிறது மற்றும் வயிற்றுப்போக்கைத் தடுக்கிறது, அத்துடன் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது: இந்த பழத்தில் அதன் பல தாதுக்களில் செம்பு உள்ளது மற்றும் இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது, கூடுதலாக உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
மூளையின் செயல்பாட்டை ஆதரிக்கிறது: வைட்டமின்கள் பி 3 மற்றும் பி 6 ஆகியவை மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு குறிப்பாக நன்மை பயக்கும்.
திசுக்களை சரிசெய்தல்: செயல்பாடுகளில் இருந்து குணமடைந்து வருபவர்களுக்கு அல்லது தோலில் வெட்டுக்கள் அல்லது காயங்களுக்கு ஆளானவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது, ஏனென்றால் இது திசுக்களை மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த மிகவும் அவசியமான ஒரு புரதமான கொலாஜன் உருவாகிறது.
-
*உடலிலுள்ள கழிவுகள் வெளியேற்றவும் மற்றும் Belly fat குறையவும்*
*தினமும் குடிக்க வேண்டிய (7 வகையான பழச்சாறுகள்) (Natural Detox Drinks)*
*ஜீரணத்திற்கும், மெட்டபாலிசம் அதிகரிக்கவும் உதவும்.*
================
*🟢 1. எலுமிச்சை–தேன்–சூடுநீர்*
✨ எப்படி செய்யது?
வெந்நீரில் ½ எலுமிச்சை சாறு
1 ஸ்பூன் தூய தேன்
காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்
✔️ பயன்:
உடல் கொழுப்பைக் கரைக்கும்
ஜீரணம் சீராகும்
bloating குறையும்
===============
*🟢 2. வெள்ளரிக்காய் + இஞ்சி + எலுமிச்சை Detox Juice*
✨ எப்படி செய்யது?
1 வெள்ளரிக்காய்
சிறிது இஞ்சி
½ எலுமிச்சை சாறு
1 கப் தண்ணீர்
மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கவும்.
✔️ பயன்:
வயிற்று கொழுப்பு குறையும்
உடலின் அழற்சி குறையும்
================
*🟢 3. அஜ்வைன் (Omam) Water*
✨ எப்படி செய்யது?
1 டீஸ்பூன் ஓமம்
இரவே 1 கப் தண்ணீரில் ஊறவைத்து
காலையில் வடிகட்டி வெற்றுவயிற்றில் குடிக்கவும்
✔️ பயன்:
அஜீரணம், bloating, gas குறையும்
பெல்லி ஃபேட் குறைய உதவும்
=================
*🟢 4. அலோவேரா–லெமன் ஜூஸ்*
✨ எப்படி செய்யது?
2 ஸ்பூன் அலோவேரா ஜெல்
1 கப் தண்ணீர்
½ எலுமிச்சை
✔️ பயன்:
கொழுப்பை கரைக்கும்
குடல்சூட்டை குறைக்கும்
=================
*🟢 5. பப்பாளி + எலுமிச்சை Juice*
✨ எப்படி செய்யது?
சில பப்பாளி துண்டுகள்
½ எலுமிச்சை
மிக்ஸியில் அரைத்து குடிக்கவும்
✔️ பயன்:
ஜீரணத்தை மிக வேகமாக சீராக்கும்
வயிறு கொழுப்பு குறைக்க உதவும்
===============
*🟢 6. ஆப்பிள் சிடர் வினிகர் (ACV) Drink*
✨ எப்படி செய்யது?
1 கப் வெந்நீர்
1 ஸ்பூன் ACV
½ ஸ்பூன் தேன் (optional)
✔️ பயன்:
மெட்டபாலிசம் அதிகரிக்கும்
வயிற்றுப்பகுதியில் fat storage குறையும்
================
*🟢 7. இஞ்சி–எலுமிச்சை Water*
✨ எப்படி செய்யது?
சிறிது இஞ்சி
½ எலுமிச்சை
1 கப் வெந்நீர்
✔️ பயன்:
bloating, gas குறையும்
பெல்லி ஃபேட் குறையும்
================
👇👇👇
*முக்கிய குறிப்புகள்:*
தினமும் ஒரு வகை குடிக்க தேவையில்லை — மாறி மாறி குடிக்கலாம்
அதிக சர்க்கரை சேர்க்க வேண்டாம்
காலை வெறும் வயிறு குடித்தால் சிறந்த பலன்
இரவு நேர ஜங்க் ஃபுட், அதிக எண்ணெய் தவிர்த்தால் பெல்லி ஃபேட் வேகமாக குறையும்.