FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 30, 2025, 08:13:23 AM

Title: அஜீரணக் கோளாறு பிரச்சனையா? இதுல ஒரு டம்ளர் போதுமே...
Post by: MysteRy on October 30, 2025, 08:13:23 AM
(https://i.ibb.co/7dwXG8LQ/571300368-1297408959086995-7284403207963978923-n.jpg) (https://ibb.co/S4hPKWGc)

அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கு அவர்களின் மோசமான உணவுப் பழக்கங்கள், உடல்பருமன், அசிடிட்டி, அல்சர், மலச்சிக்கல் போன்ற பல காரணங்கள் உள்ளது.

இந்த பிரச்சனை தீவிரமடையும் போது அடிவயிற்று வலி, வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை, ஏப்பம், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும்.

எனவே அஜீரணப் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் பெற அருமையான ஜூஸ் இதோ


தேவையான பொருட்கள்

முலாம் ஜூஸ் - 1 டம்ளர்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை

முலாம் பழத்தை நன்றாக அரைத்து அதை ஜூஸ் செய்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை நன்றாக கலந்து கொண்டால் ஜூஸ் ரெடி.

குடிக்கும் முறை

அடிக்கடி அஜீரணப் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் இந்த ஜூஸை தினமும் உணவு சாப்பிட்ட பின் குடிக்க வேண்டும்.

இதேபோல் தொடர்ந்து 3 மாதங்கள் குடித்து வந்தால், அஜீரணக் கோளாறு பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட்டு விடலாம்.

நன்மைகள்

முலாம்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விட்டமின் C போன்ற சத்துக்கள் உள்ளதால், இது செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்று பிரச்சனையை தடுத்து, உடலின் குளிர்ச்சியை அதிகமாக்குகிறது.
எலுமிச்சையில் உள்ள விட்டமின் C மற்றும் லெமோனேன் போன்ற சத்துக்கள் அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும் அதிகப்படியான அமிலச் சுரப்பைக் குறைக்கிறது.