(https://i.ibb.co/8D90cx3s/571789132-122259103754037466-6098073094529055403-n.jpg) (https://imgbb.com/)
உலகிலேயே அமைதியாக ஒருவரைத் தாக்கி கொல்லக்கூடிய ஒரு கொடிய நோய் தான் புற்றுநோய். இந்த புற்றுநோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வருகின்றனர். புற்றுநோய் ஒருவரை எப்போது தாக்கும் என்று கூற முடியாது. இந்நோய் ஒருவரை எப்போது வேண்டுமானாலும், எந்த வயதினரையும் தாக்கலாம்.
நம் உடலில் உள்ள சில செல்களின் மரபணு தோற்றங்களில் மாற்றங்கள் அல்லது செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பெருக்கமடைந்தால் ஏற்படும் நிலை தான் புற்றுநோய். இப்படி பெருக்கமடையும் செல்கள் உடலின் இதர உறுப்புக்களிலும் பரவி, இறுதியில் மரணத்தையே உண்டாக்கிவிடும். குழந்தைக்கு வரும் புற்றுநோய் பொதுவாக வாழ்க்கையின் ஆரம்பத்தில் நிகழும் டி.என்.ஏ மாற்றங்களால் வெளிப்படுகிறது.
அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட வைட்டமின் பி17 - ஏன் தெரியுமா?
உலக சுகாதார நிறுவனத்தின் படி, மரணத்தை உண்டாக்கும் முதன்மையான நோய்களில் பட்டியலில் புற்றுநோய் உள்ளது. 0 முதல் 19 வயதிற்குட்பட்ட சுமார் 3,00,000 குழந்தைகளுக்கு ஒவ்வொரு வருடமும் பல்வேறு வகையான புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
🔮
குழந்தை புற்றுநோய்க்கான அறிகுறிகள்:
குழந்தை புற்றுநோய்க்கான அறிகுறிகளானது, அன்றாடம் சந்திக்கும் சிறு ஆரோக்கிய பிரச்சனைகள் போன்று தான் இருக்கும். எனவே உங்கள் குழந்தைக்கு ஏதேனும் குறிப்பிட்ட சில அறிகுறிகள் பல நாட்களாக தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து, அவர்களிடம் கூறுங்கள்.
இப்போது குழந்தைகளைத் தாக்கும் சில புற்றுநோயின் வகைகளையும், அதன் அறிகுறிகளையும் காண்போம்.
.....
#இரத்த புற்றுநோய்:
இந்த வகை புற்றுநோய் இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளைத் தாக்கும். இந்த புற்றுநோயின் அறிகுறிகளாவன:
* எடை குறைவு
* காய்ச்சல்
* எலும்பு மற்றும் மூட்டு வலி
* களைப்பு
* பலவீனம்
* விவரிக்கமுடியாத இரத்தக்கசிவு
....
#மூளைக்கட்டி:
குழந்தைகளுக்கு மூளையில் கட்டி இருந்தால், வயதிற்கு ஏற்ப மற்றும் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து அறிகுறிகள் வெளிப்படும். அதில் பொதுவான சில அறிகுறிகளாவன:
* தொடர்ச்சியான வாந்தி
* தலைவலி
* தலைச்சுற்றல்
* வலிப்பு
* பார்வை, கேட்பதில் அல்லது பேசுவதில் பிரச்சனை
* சமநிலை பிரச்சனை
* தலை பெரிதாவது
....
#கல்லீரல் புற்றுநோய்:
ஹெபடோபிளாஸ்டோமா என்னும் ஒரு வகையான கல்லீரல் புற்றுநோய் குழந்தைகளை தாக்கக்கூடியது. பெரும்பாலும் இது எடை குறைவில் பிறந்த குழந்தைகளைத் தாக்கும். இதன் அறிகுறிகளாவன:
* அடிவயிற்றில் வலி மற்றும் வீக்கம்
* எடை குறைவு
* பசியின்மை
* கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படுவது
* அடர் நிறத்தில் சிறுநீர்
* களைப்பு
* பலவீனம்
* இரத்த சோகை
....
#எலும்பு புற்றுநோய்:
ஆஸ்டியோஸ்கார்கோமா என்பது குழந்தைகளைத் தாக்கும் ஒரு வகையான எலும்பு புற்றுநோய். சுமார் 3 சதவீத குழந்தைகள் இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அறிகுறிகளாவன:
* எலும்பு வலி
* கட்டி உள்ள பகுதியில் வீக்கம்
* புற்றுநோய் உள்ள பகுதியை அசைக்க முடியாமை
* வலியுடனான செயல்பாடுகள்
* நொண்டி நடப்பது
* பலவீனமான எலும்பால், எலும்பு முறிவு எளிதில் ஏற்படுவது.