FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on October 26, 2025, 07:54:53 AM

Title: ஜிலேபி - ஜாங்கிரி இரண்டும் ஒன்றல்ல...
Post by: MysteRy on October 26, 2025, 07:54:53 AM
(https://i.ibb.co/Q3HKhYvp/571119279-122258377928037466-1953921446364209856-n.jpg) (https://ibb.co/tT2JnYpQ)

ஜிலேபி பார்க்கறதுக்கு
ஜாங்கிரயோட பங்காளி மாதிரி
இருந்தாலும் ஜாங்கிரி வேற, ஜிலேபி வேற.

ஜாங்கிரி உளுந்து மாவு சேர்த்து செய்வாங்க. அளவில் பெரியதாகவும் சின்ன சுத்து அதையே பெரிய சுற்றாக அழகாக கலைநயத்துடன் மெது மெதுவாக மென்மையாக இருக்கும்.

ஆனால் ஜிலேபி மைதா மாவுல செய்வாங்க. சுற்றுக்கள் கசமுசான்னு 4-5 சுற்றுடன் சிறிய அளவில் மொறுமொறு என்று இருக்கும். இந்த வித்தியாசத்தை நீங்க புரிஞ்சிகிட்டா போதும்.

ஜிலேபி மைதா மாவுல செஞ்சாலும்,
ஜீராவில ஊறி மேல இனிப்பு கோட்டிங், உள்ள மைதாவோட மொறு மொறுப்புன்னு சாப்பிட செமையா இருக்கும்.

ஆந்திரா பக்கம் போனா, சாயங்கால மார்க்கெட்ல சுடச்சுட எடுத்து ஒரு பேப்பர்ல வச்சு தருவாங்க.

இம்புட்டு நாள் இந்த வித்தியாசம் கூட
அனேகம் பேருக்கு தெரியாமலே
சாப்பிட்டு வந்திருக்கிறோம்.

இந்த வருட தீபாவளிக்கு உங்கள் வீட்டில் ஜிலேபியா? ஜாங்கிரியா?