FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on October 24, 2025, 06:49:53 PM
-
தொல்லை !
பகலில் உன்னை நினைக்காமல்
இருக்கமுடிவதில்லை
இரவிலோ
என்னை நெருங்காமல்
நீ இருப்பதில்லை
இரவு முழுவதும்
என் தூக்கத்தை
சூறையாடுகிறாய்
நீ முத்தம் இடுகையில்
ஏனோ
என் ரத்தம் உறிஞ்சுவதாய்
உணர்கிறேன்
நீ பெண்
நான் ஆண்
இருந்தும்
இந்த சமூகம்
நம்மை தவறாய்
நினைக்காது
உன்னுடன்
இரவை கழித்தால்
மரணம் கூட என்னை
நெருங்கலாம்
நீ இல்லா
இரவை கடக்கவே
என் மனது துடிக்கிறது
உன்னை பிரிய
செய்த சூழ்ச்சியெல்லாம்
முறியடிக்கிறாய்
என்ன செய்ய என
யோசனையில்
என் பகல் கடக்கிறது
யாரவது தெரிந்தால்
யோசனை
சொல்லுங்களேன்
இந்த கொசு தொல்லை
தாங்கலப்பா :D :D