FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on October 23, 2025, 07:55:46 PM
-
வாடா என் காதல்
ஈர்ப்பு
என்று காதலானது
அறியவில்லை
உன் விழிகளால்
எனை ஈர்த்து
வீழ்த்திவிட்டாய்
பௌர்ணமி முழு நிலவு போல்
உன் முகம் அதில்
ஜொலிக்கும் நட்சத்திரம் போல்
உன் மூக்குத்தி
கவிதைகள் பல இருந்தும்
உன் உதடுகள் உதிர்த்த
வார்த்தைகள் தான்
நான் கேட்ட மிக சிறந்த கவிதை
கர்ஜிக்கும் சிங்கத்தையும்
முயல்குட்டியாய்
மடியில் கிடத்தி
தலை கோத உன்னால் தான்
முடியும்
உன் கூந்தல் உதிர்த்த
மலர்கள் எல்லாம்
எடுத்து சேமித்து வைத்தேன்
நானும் ஒரு நாள்
உன் மனதில் இருந்து
உதிர்ந்து விழுவேன்
என அறியாமல்
உன் சுவாசம் அடைத்த
பலூனையும்
எடுத்து வைத்தேன்
என் சுவாசமே நீ இன்றி
ஒருநாள்
தவிப்பேன் என அறியாமல்
உன் குரல் உள்ள
ஒலிநாடாவும்
அடுக்கி வைத்தேன்
அதில் தான் இனி உன் குரல்
கேட்பேன் என அறியாமல்
உன் புகைப்படம்
அனைத்தும்
அலங்கரித்து வைத்தேன்
உன்னை மிகவும் நேசித்தேன்
மணப்பெண் கோலத்தில்
உன் அருகில் நான் என
என் கனவுகளில் லயித்தேன்
பொய் உவமை சேர்த்து எழுதிய
என் கவிதைகள் போல்
என் காதலும் இருக்கும்
என நினைத்தாயோ ?
என் தனிமையையும்
களவாடி
நினைவுகளாய்
என்னை
காதலிக்கிறாய்
என்னை காண நீ மறந்தாலும்
இல்லை மறுத்தாலும்
இந்த ஒற்றை ரோஜா வாடினாலும்
என்றும் வாடா என் காதல்
உனக்காய் காத்திருக்கும்
காலமெல்லாம்
உன் வரவை எண்ணி
****JOKER***