FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on October 23, 2025, 01:44:05 PM

Title: வாழ்வு !
Post by: joker on October 23, 2025, 01:44:05 PM
அள்ள அள்ள
குறையாத அன்பை
யாரிடமிருந்தேனும்
நீங்கள்
பெற்றிருக்கிறீர்களா ?

சிந்திக்க சிந்திக்க
திகட்டாத நினைவுகளை
யாரிடமிருந்தாவது
பெற்றிருக்கிறீர்களா ?

ஏங்கி ஏங்கி
ஒருவருக்காக
வாழ்வில்
காத்திருந்திருக்கிறீர்களா ?

ஆணி அடித்தவர் மீதும்
பூதூவி
அன்பை பொழியும்
மரங்களை போல
யாரையேனும்
வாழ்வில்
கண்டதுண்டா ?

இப்படி உங்கள் வாழ்வில்
யாரையேனும்
கண்டால்
இறுக பற்றிக்கொள்ளுங்கள்
ஏனெனில்
அப்போது தான் உங்கள்
வாழ்வின்
ஒவ்வொரு நொடியும்
அழகாகும்

வாழ்வில்
கிடைக்காத
பொக்கிஷம்

என் எழுதும்
பேனாவின் முள்ளும்
அவர்களை பற்றி
எழுத நினைக்கையில்
காயப்படுத்த கூடாதென
வார்த்தைகளின்றி
திக்கித்து நிற்கும்

பொன் நகை
தேடாமல்
புன்னகை தேடுங்கள்
வாழ்வு
அழகாகும்


****JOKER****