(https://i.ibb.co/F17PF51/565898259-122257590182037466-1940796314435986481-n.jpg) (https://imgbb.com/)
#சார்லிசாப்ளின்.
எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் ?
எங்கே வாழ்கிறீர்கள் ? என்பதை விட முக்கியமானது. எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள் என்பது.
எங்கு இருக்கிறீர்கள் என்பதைவிட, அங்கு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? என்பதைத் தான் பிறர் பார்ப்பார்கள்.
ஒரு நல்ல சிரிப்பு, ஒரு நீண்ட தூக்கம் இவை இரண்டும் மிகச் சிறந்த மருந்தாகும் எதையும் குணப்படுத்த.
வாழ்க்கையில் நல்லது நடந்தால் பெருமை கொள்ளுங்கள். நடக்கவில்லையா அதை விட அதிக அளவு பெருமை கொள்ளுங்கள்.
ஏனென்றால் நாளை அதைவிட சிறப்பாக அமையும். நம்பிக்கை என்ற வாளை கையில் எடுங்கள்.
உலகமே தோற்றுப் போகும் இழப்பதற்கு ஒன்றும் இல்லை, தொடுவதற்கு வானம் எல்லை, வளைந்துபாருங்கள் வானமும் உங்கள் வசப்படும்.
வாழ்வில் ஒவ்வொருவரின் பாதைகள் வேறு பயணங்கள் வேறு. சிலரின் பயணத்தில் வழிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். வலிகள் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம்.
சிலரின் பயணத்தில் வழிகளை உருவாக்க வேண்டி வரலாம். வலிகள் நிறைந்த பயணமாக இருக்கலாம். வலிகளை அனுபவித்த நாட்களே மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
உங்கள் வலிகளுக்கான பல மடங்கு பலன்கள் நிச்சயம் கிடைக்கும். வழிகள் தெரியாமல் நிற்கும் பொழுது சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்காக இறைவன் ஒரு புது வழியையே உருவாக்கலாம். உங்களுக்கான பாதைகள் உங்களை வாழ்வில் மிகச் சிறந்த நிலைக்கு இட்டுச் செல்லலாம். ஆகவே பாதைகள் எப்படி இருந்தாலும் இறைவனை நம்பி பயணத்தை தொடருங்கள். உங்கள் பயணங்கள் நிச்சயமாக சிறப்பாக இருக்கும்.