FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on October 21, 2025, 08:29:35 AM

Title: விமானங்கள் ஏன் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது?
Post by: MysteRy on October 21, 2025, 08:29:35 AM
(https://i.ibb.co/qYgGjnRW/566205383-122257591820037466-1275108353484610730-n.jpg) (https://ibb.co/GQMwpJVt)

‘கபாலி’ பட ரிலீஸின் போது ரஜினி படத்தை விமானத்தில் பெயிண்ட் அடித்து பறக்க விட்டார்கள். விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சு. தலைவர் படம் வானத்துல மிக உயரத்துல பறந்த மாதிரியும் ஆச்சு. ஆனா இதெல்லாம் எவ்வளவு ஆபத்தான விஷயம் தெரியுமா? அது சரி... ஏன் எல்லா விமானங்களுக்கும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறார்கள் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

பிரிட்டீஷ் ஏர்வேஸானாலும் சரி..
ஏர் இந்தியாவாக இருந்தாலும் சரி... இவ்வளவு ஏன்.. எல்லா விஷயத்திலும் முரண்டு பிடித்து வரும் பாகிஸ்தான் விமானமாக இருந்தாலும் ஏறக்குறைய பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். விமானங்களில் எண்ணெய் கசிவு, விரிசல் போன்று ஏதேனும் இருந்தால் அதை எளிதாக கண்டறிவதற்கு இந்த வெள்ளை நிறம் தான் உதவி செய்கிறது. நம்மூர்ல, எதையாவது வாங்கும் போது, வெள்ளையா இருந்தா சீக்கிரம் அழுக்குத் தெரியும்னு நெனைப்போம் இல்லையா... அந்த லாஜிக் ஒரு காரணம். அதை கவனிச்சு உடனே சரிசெய்து பெரிய ஆபத்தைத் தவிர்த்துடலாம். அப்புறம் வெள்ளை நிறம் விமானங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும். விமானங்கள் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுவதற்கு இது தான் மிக முக்கியமான காரணம். வெள்ளையை தவிர வேற கலர்ல பெயிண்ட் செய்தா, அது சூரிய ஒளியை அதிகம் உறிஞ்சி சூட்டை கிளப்பி விட்டுடும். எனவேதான் விமானங்கள் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுகின்றன.
வெப்பத்தை குறைக்கறதோட சூரிய கதிர்வீச்சுகளால் சேதாரம் உண்டாகும் வாய்ப்புகளையும் வெள்ளைக் கலர் குறைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்களுக்கு வெள்ளை நிறம் அடிக்க மற்றொரு முக்கியமான காரணம் சிக்கனம். அதாவது கூடுதல் வண்ணங்களை பயன்படுத்துவதால் விமானத்தின் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதும் உண்மை. பெயிண்ட் காரணமாக ஒரு விமானத்தின் எடையானது 273 முதல் 544 கிலோகிராம் வரை அதிகரிக்கிறது.