FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 16, 2025, 08:18:28 AM

Title: சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது......
Post by: MysteRy on October 16, 2025, 08:18:28 AM
(https://i.ibb.co/B2LGQvD2/559186698-1285678430260048-3518738427185449525-n.jpg) (https://ibb.co/4RW2XCyR)

# வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

# ஆரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரைகளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது.

நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம். மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம்.

பேரீச்சம்பழம், கொய்யாக் காய்,பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு சாப்பிடலாம். மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம். ஒரே நாளில் அனைத்து பழ வகைகளையும் சாப்பிடக் கூடாது...