(https://i.ibb.co/gbkyrsZY/559005068-122256371996037466-3348196521897625725-n.jpg) (https://imgbb.com/)
* பீன்சில் அதிக அளவு வைட்டமின், தாதுக்கள் நிறைந்துள்ளன. கலோரி அளவு குறைவாக உள்ளதால், எளிதில் ஜீரணமாகும்.
* நுாறு கிராம் பீன்சில், நார்ச்சத்து, 9 சதவீதம் உள்ளது. இந்த நார் சத்தானது, குடலின் உட்புற சுவர்களை பாதுகாத்து, நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது; புற்றுநோயை குணப்படுத்தும் இதில், வைட்டமின் 'ஏ' சத்து நிறைந்துள்ளதால், கண் பார்வை தெளிவடையும் .
பீன்சில் உள்ள வைட்டமின், 'பி - 12' கருவுற்ற பெண்களுக்கு, குழந்தை நன்கு வளரவும், நரம்பு பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கிறது. வைட்டமின், 'சி, பி - 6' மற்றும் 'தையமின்' இருப்பதால், உடலுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. இதில், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. மெக்னீசியம், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொட்டாசியம், இதய துடிப்பை சீராக்குகிறது; ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
பீன்சை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை பருகி வந்தால், வாய் புண், குடல் புண் ஆறும். நீண்ட நாள் ஆறாத புண்களை, பீன்சின் வேக வைத்த நீரால் கழுவி வந்தால், விரைவில் ஆறும்
இதை உணவில் சேர்த்துக் கொண்டால், செரிமான சக்தி அதிகரிக்கும்; வாயு தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார் சத்து, மலச்சிக்கலை போக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, ரத்தத்தை சுத்தமாக்கும். ரத்தக் குழாய் அடைப்புகளை போக்கும் மற்றும் இதய அடைப்பு மற்றும் இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.
நீரிழிவு நோயாளிகள், பீன்சை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், நோயால் உண்டாகும் பாதிப்புகள் குறையும். மேலும், மூல நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, பீன்ஸ் சிறந்த உணவு.