FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on October 11, 2025, 08:48:25 AM

Title: ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன தெரியுமா? 🗄🗄
Post by: MysteRy on October 11, 2025, 08:48:25 AM
(https://i.ibb.co/hJrknbp8/558800292-122256046826037466-2009615387515147911-n.jpg) (https://imgbb.com/)

கெட்டுப் போய்விட கூடாதென உணவுப் பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்த காலம் மாறி, ஃப்ரிட்ஜில் வைத்ததாலேயே கெட்டுப்போகும் உணவுகளைப் பலரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் வைப்பதால் சில உணவுகளின் தன்மை மாறிப்போகும்.

ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாதது வாழைப்பழம். ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் அதிகப்படியான குளிரும் இருளும் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுப்பதோடு, அழுகவும் செய்துவிடும். திறந்த, உலர்ந்த இடங்களில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.

காயாக இருக்கும் அவகேடோவை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. பழுத்த அல்லது ஏற்கெனவே வெட்டிய பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

ஃப்ரிட்ஜிலிருக்கும் ஈரப்பதம் வெங்காயத்தை மென்மையாக்கி, பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்திவிடும். அத்துடன் ஃப்ரிட்ஜிலிருக்கும் மற்ற உணவுப் பொருள்களிலும் இதன் வாசனை பரவிவிடும்.

பூண்டை ஃப்ரிட்ஜில் வைத்தால் ரப்பர்போல மாறிவிடும். ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், இது சீக்கிரமே உலர்ந்துவிடும். உருளைக் கிழங்கு: ஃப்ரிட்ஜில் வைத்தால், உருளைக் கிழங்கிலிருக்கும் ஸ்டார்ச், விரைவில் சர்க்கரைச்சத்தாக மாறி, சுவையைக் கெடுத்துவிடும்.

காபிக்கொட்டை, காபித்தூள் இரண்டையும் ஃப்ரிட்ஜில் வைத்தால் அவற்றின் சுவை மாறக்கூடும். மேலும், ஃப்ரிட்ஜிலிருக்கும் மற்ற பொருள்களின் வாசனையை அவை உட்கிரகித்துக் கொள்ளும்.

தேனை ப்ரிட்ஜில் வைத்தால், படிகங்களாக உறைந்துவிடும். எனவே, தேன் பாட்டிலை இறுக்கமாக மூடி அறை வெப்பநிலையில் வைத்திருப்பதே சிறந்தது.