(https://i.ibb.co/tTmg8fLr/560452144-122256047078037466-5466691528437444765-n.jpg) (https://ibb.co/0RDThNsb)
நம் உடலில் எங்கேயாவது மரத்துப்போய் விட்டால் அது நம் மூளை முதுகு தண்டுவடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற அறிகுறியாகும். உடலிலுள்ள உறுப்புகள் மரத்துப்போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான உண்டான அறிகுறிகள் என்று நாம் சொல்லலாம்.
நம் உடலில் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்க்கான அறிகுறியாகும் அதாவது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்ற அறிகுறியை காட்டுகின்றது சிலருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போவது பிரச்சனை இருந்தால் அது மரபணுக்களில் கோளாறு கூட இருக்கலாம் அதே போல் ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரையை எடுத்துக் கொண்டு இருந்தாலும் கை கால்கள் மரத்துப்போகும் பிரச்சனை ஏற்பட்டு விடும்.
தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு குறைந்தால் இந்த கை கால்கள் மரத்துப் போகும் பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகின்றது உடல் எடை அதிகரித்து உடலில் அதிக கொழுப்பு சேர்ந்தால் இந்த மரத்துப் போகும் பிரச்சனை ஏற்பட்டு விடுகின்றது வைட்டமின் குறைபாடுகள் இருந்தாலும் இந்த கை கால் மரத்துப்போகும் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும்.
சர்க்கரை நோயாளிகள் அவர்களுக்கு கை கால்கள் மரத்துப் போகாமல் இருக்க வேண்டுமென்றால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் குறிப்பாக விரல்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டு விட்டால் அவர்களது நரம்புகளுக்கு அதிக அளவு பாதிக்கப்படும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அறிகுறியாகும் .
அதேபோல் வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் இறைச்சி உணவுகளை அதிக அளவு உட்கொள்ள வேண்டும் இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் அதற்கான சிகிச்சைகளை அருமையாக முறையாக அளித்தால் இந்த மரத்துப்போகும் பிரச்சனையை சரிசெய்து விட முடியும்,
இந்த வகையான அறிகுறி உங்களுக்கு இருந்தால் அதற்குண்டான பயிற்சிகள் செய்து இந்த நோயை குணப்படுத்தலாம்.