FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 11, 2025, 08:18:22 AM

Title: கண்கள் : நோய்களும் அதற்கான தீர்வுகளும்....
Post by: MysteRy on October 11, 2025, 08:18:22 AM
(https://i.ibb.co/67xJx83F/558192825-122256122480037466-1053586203965459807-n.jpg) (https://ibb.co/39qYqvDc)

இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய் தந்தையரே முதற் காரணம். அடுத்து சத்துக்குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத் துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண் சம்பந்தமாக பல வகையான நோய்கள் வருகின்றன.

கண் எவ்வாறு உங்களுக்குப் பார்க்க உதவுகிறது ?

கண் என்பது ஒரு புகைப்படக் கருவி போன்றதாகும். இது மூளையுடன் சேர்ந்து, உங்களைச்சுற்றியுள்ள பொருட்களைக் காண உதவுகிறது. கண்ணிலுள்ள வண்ணப் பகுதி விழித்திரைப் படலம் எனப்படுகிறது. அதன் நடுவில் கண்பர்வை எனப்படும் ஒரு வாயில் உள்ளது. இது விழித்திரைப் படலித்திற்குள் ஒரு கரிய வட்டமாகக் காணப்படும். ஒரு பொருளிலிருந்து வெளிவரும் ஒளிக் கற்றைகள் விழிவெண் படலத்தில், கண் பார்வையின் வழியே ஊடுருவிச் செல்கின்றன. கண் பார்வையின் அளவுவரும் ஒளியளவைக் கட்டுப்படுத்துகிறது. கண் பர்வையின் பின் புறம் ஒளிக்கற்றையை அனுப்பும் ‘லென்ஸ்’ உள்ளது. இப்படி செலுத்தப்படும் ஒளிக்கற்றைகள் விழித் திரையின் மீது விழும். விழித்திரையென்பது, புகைப்படக் கருவிக்குள் புகைப் படச்சுருள் இருப் பதைப்போல கண்ணின் பின் புறமுள்ள ஒரு மெல்லிய, உணர்ச்சிமிக்க திரையாகும்.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்கலாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூலமாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள்மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

கண்ணில் நோய் வரக் காரணமென்ன?

முதலில் கூறியதுபோல ஆரோக்கியம் இல்லாமல் குழந்தைகளைப்பெறும் பெற்றோர் ஒருகாரணம். சத்துக் குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டாலும் கண் நோய்கள் வரும். பார்வை நரம்பில் ஏற்படும் இரத்தக்குறைவு, இரத்த ஓட்டம் தடைபடுதல், இரத்த அழுத்தம் குறைவு காரணமாகவும் கண்கோளாறுகள் வரலாம். பரம்பரைக் காரணமாகவும் கண் கோளாறுகள் வரலாம். தொற்று நோய்க் கிருமிகள், காற்றில் வருகின்ற கிருமிகள், தூசி, தீ போன்றவற்றாலும் கண் நோய்கள் வரலாம்.

உணவு வகைகளில் கண்களைப் பாதுகாக்க…

வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இர த்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுகளுக்கு கேரட், பீட்ரூட், வெண்பூசணி, முள்ளங்கி, வெண்டைக் காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணி க் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம். பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம். அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம்.

சத்துக் குறைவால் கண் நோய்கள் நீங்க…

சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்த மல்லி இலைச் சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட்சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில் லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இரு வேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்)
பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங் காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம். புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம்.

கண் பார்வை தெளிவடைய…

பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும்பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது. அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும். பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங் கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளை எப்படி கண்டுபிடிப்பது?

1)வகுப்புப்பாடங்கள் கவனிக்கும்போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.
2) கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.
3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.
4) கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.
5) கண் கட்டி அடிக்கடி வருவது.
6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்.

மாறுகண்ணை சரி செய்ய முடியுமா?

கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை நோக்கி இருந்தால் அது மாறு கண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்னையை சரி செய்ய வேண்டும்.. வயதாகியும் சிலர் மாறு கண்ணோடு நன்றாக இருப்பது போல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.

கண்களில் பூ விழுவது என்றால் என்ன?

கண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.

கண்களுக்கு வைட்டமின் `ஏ‘ எந்தெந்த உணவுகளில் அதிகமாக உள்ளது?

முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் `ஏ‘ போதிய அளவுள்ளது. மேலும் மாம்பழம் கேரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.