FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on October 06, 2025, 01:41:56 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 385
Post by: Forum on October 06, 2025, 01:41:56 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்

1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025 (https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/rules2.png)

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 385

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/385.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 385
Post by: Lakshya on October 06, 2025, 10:20:18 PM
தங்கமே உன்னை தான் !!!

ஹே தங்கமே !!! சாரி டி மணிச்சுக்கோ டி !!!
சின்ன சண்டை தானடி இது...இதுக்காக ஏன் என்கிட்ட பேசாம இருக்க ??

நீ பேசாம கஷ்டமா இருக்கு என்று கெஞ்சி கேட்டபடி அவளை பின் தொடர்ந்து சென்றான் காதலன்...

அவளே தவறு செய்து இருந்தாலும், பிடிவாத குணம் அவளை விட்டுக்கொடுத்து போகாமல் தடுத்தது...
"அகம் பிடிச்ச கழுதை"nu சும்மாவா சொன்னாங்க இவள, இப்படி கெஞ்ச விட்டாலே என்று எண்ணிய அவன் சிறிதும் முகம் சுளிக்காமல் மன்னிப்பு கேட்டு நடந்தான்...

அலைகள் ஓய்வதில்லை உங்கள் அன்பை போலவே !!! என்று கடல் இவர்களை பார்த்து கவிதை கூற ஆரம்பித்த நேரம் அது...

என் அலைகளின் ஓசையிலும் அவர்கள் கதையை கேட்டறிந்தேன்...கரையை தொடும்
ஒவ்வொரு அலையிலும் உங்களின் காதலை உணர தொடங்கினேன்...

உங்கள் காதல் கதை எனது அலைகள் போல தொடரும்,
சிறிய ஒவ்வொரு அலையும் உங்கள் நினைவுகளை பேசும்…

அவன் கண்கள் முன்னே அவன் எதிர்காலம் நடந்து செல்ல, அவள் இதழோரம் சிறு புன்னகை தீண்டி சென்றது...நான் வியந்து பார்த்தேன் காதல் இது தானா என்று...

அருகில் இருந்தும் சண்டை போடுவது சரி தானா ? கடல் கடந்தும் காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று அவர்களுக்கு உணர எண்ணினேன்...ஆனால் அது தேவைப்படவில்லை ஏனெனில் "கெஞ்சல்" சத்தம் சற்று நேரத்தில் "கொஞ்சல்" சத்தமாக மாறியதை கேட்டேன்...

இந்த காதல், கடலாய் பரவட்டும் எல்லைகள் இல்லாமல்...கடலின் ஆழம் போல் அவர்கள் அன்பு நிலைக்கட்டும் என்று பிரபஞ்சத்திடம் எண்ணி இக்கவிதையை முடித்து கொள்கிறேன்...

                                                 - கடல்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 385
Post by: Clown King on October 06, 2025, 10:21:11 PM
அறியாத வயதில் புரியாத அன்பு
விட்டுக் கொடுத்ததில்லை நீ என்றும் என்னை                                           என்னை  ஏசுவாய் அடிப்பாய் அதை உனது உரிமை என்பாய்  என்னை விட்டுக் கொடுத்ததில்லை நீ என்றும் என்னை
பல காலம் தனித்து இருந்தும் பல மைல்கள் கடந்து இருந்தும் என்றும் இருந்தாய் எனது அருகில் ஒரு பிம்பமாய்

சொப்பனத்தில் வந்திடுவாய் ஓய்வில்லாது இமைகள் மட்டும் மூடி இருக்கும் கருவிழியில் நீ இருப்பாய் கலங்கிட விட மாட்டாய் நீ என்றும்

வாழ்க்கையில் தடுமாற்றம் என்னை வீழ்த்திட ஆயிரம் பேர் காத்திருந்தும் எதிர் வந்து நின்றாய்  கரம் பிடித்து உடன் வந்தாய் விட்டுக் கொடுத்ததில்லை என்றும் நீ

உன் மெல்லிய கரம் அதில் தான் எத்தனை சக்தி உயர்த்திட்டாய் வாழ்வில் எனையும் உடன் சேர்ந்து விட்டுக் கொடுத்ததில்லை என்றும் நீ

அன்பால் கட்டிப் போட்டாய் அரவணைப்பால் ஆறுதல் தந்தாய் உன் புன்னகையால் என் வாழ்வை மலரச் செய்தாய் விட்டுக்கொடுத்ததில்லை என்றும் நீ

ஏழு ஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் உனைப் போல் ஒரு மங்கை என் துணையாய் வருவதற்கு அறியவில்லை நான் எத்தனை புண்ணியம் செய்திருக்கிறேன் என்று நீ என் துணையாய் வருவதற்கு

என் வாழ்வின் கொடையாய் நீ வந்தாய் உன் பயணத்தில் குடையாய் நான் வரமாட்டேன் நீ நடந்து செல்லும் தூரம் எல்லாம் பின் தொடர்வேன் என் நிழலையே உனக்கு குடையாய் தந்து

பகலில் வரும் இரவி நீ நடக்கும் தூரங்களில் தன் உஷ்ணத்தை உன்மேல் பட விடுவேனோ என் வாழ்க்கைக்கு குடையாய் வந்த நீ உன் பின்னால் குடை சுமந்து வருவதும் மகிழ்ச்சி இல்லாது வேறென்ன

நீலக்கடலின் அருகில் நீ நடக்கும்போது அலைகள் கூட உன் பாதம் தொட கெஞ்சுதடி உனை கண்டதும் கடல் அலைகள் கூட சாந்தமாய் கரையை தழுவுகின்றதே

நீ முன் நடக்க உன் பின்னால் உனக்காக குடை பிடித்து நான் உன் ஆயுள் காலம் வரை தொடர்ந்து வருவேன் என் இனியவளே ....

Clown King 🤡
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 385
Post by: joker on October 06, 2025, 10:23:58 PM

இதோ இந்த கடல் தாண்டி
அவள் இருக்கையில் -என்
இதயத்தில் இடம் பிடித்தவள் இவள்

செல்ல செல்ல சண்டைகளிட்ட -
போதெல்லாம்  இந்த கடல் அன்னையிடம் தான்
சொல்வேன் -அவளும் அலைகளால்
என்னை தொட்டு ஆறுதல் தருவாள்
என் சோகமெல்லாம் அவள் உள்வாங்கி
அமைதியை தந்திடுவாள்

கடற்கரையோர மணலும் ,உப்பு காற்றும் ,
நம்மிடம் பேசி பேசி செல்லும் இந்த
அலைகளும் ஏதோ பல காலங்கள் பழகிய
நண்பனின் உணர்வு தரும்

மிட்டாய்க்கு அடம்பிடிக்கும்
குழந்தைகள் போல தான்
சில நேரம் நம் காதலிகளும்

இன்றோ இருவரும்
ஒரே ஊரில்

அவளை காண
பத்து பணிக்கு
கடற்கரைக்கு வருவதாய் சொன்ன நான்
பத்து நிமிடம் தாமதமானதன் விளைவு
அம்மணிக்கு மூக்கின் மேல் கோவமாம்

தாமதமாய் வருவதால்
உயிருக்கு உத்தரவாதமில்லா ஊரில்
என் காதல் பாவம் தானே ?

அருகில் வந்ததும்
உட்கார்ந்திருந்தவள் எழுந்து நடக்க
குடைபிடித்து அவள் பின்னால் நான்

கெஞ்சல்களும் , கொஞ்சல்களும்
சிறுது நேரத்தை கடத்த
மன்னிப்பும் சிறுது ஆசுவாசத்தை கொடுக்க 
கால்கள் அலைகளை நோக்கி நிற்க
 
சீறிப்பாய்ந்து வந்த கடல் அலை
அருகே வந்து பவ்வியமாய் கால் வருட
இருக பற்றிய அவள் கைகள்
எனக்கும் உணர்த்தியது
காதல்

இயற்கை என்னும் தேவதைகளுடன்
என் கைகள் பற்றிய என் காதல் தேவதை
என் வாழ்க்கைக்கு  அழகாய்
வண்ணம் தீட்டிக்கொண்டிருக்கிறது!



****JOKER****
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 385
Post by: Yazhini on October 06, 2025, 10:48:27 PM
நான் போகும் இடமெங்கும் பின்தொடர்கிறாய்...
கரையேறி விட நினைக்கும் அலையாய்
அன்பு கரைக் காண அலைகிறாய்...
அழையா விருந்தாளியாய் வந்து வந்து போகும்
உன் நினைவுகள் என்னில் அலைமோத
கரையை உடைக்கும் வெள்ளமாய்
உன் வரவு அனைத்து எல்லைகளையும் தகர்த்துவிட
சிறு புன்னகையுடன் ரசிக்கிறேன்
நிழலாகிப் போன உன் தொடர்தலை....

படபடக்கும் இதயமும் மலையாய் கனக்க..
எட்டிப்பிடிக்கும் தூர இடைவெளியும்
பல மைல்கல்லாய் மாறி விடுகிறது....
பொதுவாக இந்த சாலை பயணம் நீண்டது தான்
ஆனால் இன்று ஏனோ குறுகி போய்விட...
மணித்துளிகளும் வேகமாக நகர்கிறது...
மழையில் நனையாமல் இருக்க குடை பிடிக்கிறாய் ஆனால் உன் நினைவில் மூழ்கும் என்னை
எதைக் கொண்டு காப்பாய்???

சிறு இடைவெளி தூரம் தான்
உனக்கும் எனக்கும் ஆனால்
அது ஏனோ இரயில் தண்டவாள
இடைவெளியாய் தோன்ற...
உவர்க்கும் கடல் காற்றில்
உனதன்பும் கலந்து மோதுகிறது...

என் நிழலானவனே...
இந்த சாலை வரை தான் நம் பயணமா?
அல்லது வாழ்க்கை முழுவதும் தொடருமா???
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 385
Post by: Evil on October 07, 2025, 12:08:03 AM
கற்பனையில் வாழும் காதல்

என் நினைவுகளில்
எங்கும், என்றும்  அவள்

ஒரு நாள் கனவில்
அவளின் சின்ன  சின்ன குறும்பு தனங்களை பார்கையில்
தோன்றியது பெரியவள் ஆனாலும் அவள் இன்னும் சிறு பிள்ளையே!
குழந்தையே போன்றே கோவித்து கொள்வாள் அவள் !

தந்தையிடம்  பிள்ளைகள் எப்படி ஆடம் பிடிக்குமோ
அதே போன்றே என்னிடம்  அடம் பிடித்து
காரியத்தை சாதித்து விடுவாள் அன்பால் அவள்!

சின்ன குழந்தைகளுக்கும்
பெரியவர்களுக்கும் பிடித்த ஒரே இடம் கடற்கரை
இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று !

ஓர் நாள்  என் காதலி என்னும் சின்ன குழந்தை
அடம் பிடித்தாள் அழைத்து செல் என்னை
கடற்கரைக்கு என்று!

என் இரு கரம் தன்னை பற்றி கொண்டாள் அவள்!
அவளுடன் சென்ற அந்த ஒரு நாளில் ,
அவளின் சின்ன பிள்ளை போன்ற குறும்புகள்
என்னையும் சின்ன குழந்தையைகவே மாற்றிய
ஒரு அழகிய நாள்!

 அது அவளும் நானும்
தாயை  கண்ட குழந்தைகள் போன்று
கடல் அன்னையின் அலையில் ,
கால்களை நனைத்து -இங்கும் அங்குமாக
அலைகளுடன் விளையாடி, கடல் கரையினில் சிற்பிகள் சேகரித்து கொண்டு
பொழுதை கழித்தோம் !

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது!
 என் காதல் தேவதை மீது வெயில் கூட பட கூடாது என்ற எண்ணத்தில்,
அவளுக்கு குடை ஒன்று வாங்கினேன்!

அவளுக்கோ வீண் செலவு என் செய்கிறீர்கள்? என்று
என்னிடம் செல்லமாய் கோவித்து கொள்வது போல்
நடித்து கொண்டு, முகத்தில் புன்னகை தவிழ -
அது உண்மையை  காட்டி கொடுத்தது கூட தெரியாமல் ,
என் மீது கோவம் இருப்பது போன்று நடித்த படி நடந்து செல்கிறாள்!
அரக்கி

நான் அசுரன் என்பதினால் அவள் எனக்கு அரக்கியே!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 385
Post by: Abinesh on October 07, 2025, 12:53:32 AM
மழை பொழிகிறது மழை பொழிகிறது உன்னைத் தேடி,

விழியிலிருந்து கண்ணீர் பொழிகிறது நீ எங்கே என்று உன்னைத் தேடி,

சோகத்தில்  FTC Fm -யில் ஏ ஆர் ரஹ்மான் பாடல் கேட்டு என்னை மறந்தேன் உன்னிடத்தில்

உனக்குள் தொலைந்த என் இதயத்தை திறந்து பார் அங்கே யாரும் இல்லாத ஒரு உலகம் அங்கே நீயும் நானும் மட்டும் தான் அந்த உலகத்திற்கு பெயர் காதல்.

காதல் எனும் மழை நீ
நீ வந்தால் உன்னை சேமிப்பேன் என் இதயத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டியாக.

வானவில்லில் உள்ளது ஏழு நிறங்கள்
உன்னை காணவில்லையென்றால் வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் எனக்கு கருப்பு நிறம் போன்றது.

ஒளியிலே தெரிவது தேவதையா என்ற இளையராஜா பாடல் போன்று
உன்னை பார்த்தவுடன் என் மனது என்னை இழு இழு இழு என்று இழுக்குதடி ஏ ஆர் ரஹ்மான் பாடல் போல.

கடல் கரை ஓரம் நீ நடக்கையில் எழும் சூறாவளி புயல்,
அங்கே  தூண்டில் வளைவாக இருப்பேன் நான் உனக்கு

நான் என்னை மறக்கிறேன் அனுதினமும்
உன் நினைவின் சுமை தாங்க முடியாமல் டைட்டானிக் கப்பல் போல கடலில் மூழ்கினேன்

மொத்தத்தில் உன் மனம் பொன் குடம்
உன் குணம் என்னிடம் இல்லை அதற்கு நிகர் பணம் உன்னை பின் தொடர்வேன் தினம் தினம் தினம் என்று என் கவிதையை முடித்துக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.




Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 385
Post by: சாக்ரடீஸ் on October 07, 2025, 06:19:20 PM
சில பொய்கள்
சில மனிதர்கள் மேல்
மழைபோல் பொழிகின்றன
அவற்றின் துளிகளில் நனைந்து
மனங்கள் சுருங்கி நடுங்குகின்றன.

அந்த மழையின்
குளிரில் துடிக்கும்
நம்பிக்கையற்ற மனிதர்களுக்கு
நாம் செய்யும் சிறந்த உதவி
உண்மை என்னும் குடையை விரிப்பதே.

அந்த குடையின் நிழலில்
சிலர் மீண்டும் தங்களின்
முகத்தை காண்கிறார்கள்.
பொய்களின் போர்வையில்
மறைந்திருந்த சில முகத்திரைகள்
கிழிந்து விழுகின்றன.

பொய்களை ஆயுதமாக்கி
தங்கள் வாழ்வை
மணல் கோட்டை போல் கட்டியவர்கள்
உண்மை என்னும் கடல்
ஒரு நாள் அவர்களின்
கோட்டையை விழுங்கும்
அவர்களின் செல்வாக்கை
சிதறடிக்கும்.

அந்த நாளில் நாம் செய்த செயல்
சிறு விதையாகத் தோன்றினாலும்
உலகுக்கு உண்மை என்ற ஒளியை
தரக்கூடிய வேராக மாறும்.

பொய்கள் சூழ்ந்த இருளிலும் கூட
உண்மை குடையின் கீழ்
ஒரு மனிதன் நெஞ்சை நிமிர்த்தி
நடக்க வைக்கும் ஓடி ஒழிய செய்யாது.

அதுவே அந்த
உண்மைகுடையை விரித்த
நற்செயலுக்கு கிடைத்த வெற்றி.

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 385
Post by: Thenmozhi on October 08, 2025, 04:02:55 AM
     என்னவனே திரும்பி வந்துவிடு

நீல வானம் நீலக் கடலினை தொடுகின்ற அழகு!
நீல வானத்தில் வெண்முகில் கூட்டங்கள் ஆங்காங்கே அலைந்து திரியும் அழகு!
நீல கடலில் கரை ஒதுங்கும் வெண்ணிற அலைகளின் அழகு!
நீல கடலில் பயணிக்கும் படகின் அழகு!
நீண்ட தூரம் செல்வோம் இந்த அழகை ரசிக்க நானும் அவனும்!

சுடும் வெயில் என் மேனியை நெருங்க விடாமல் குடை பிடிப்பான் என்னவன்!
சுடும் மணலில் என் பாதங்கள் வெதும்பும் என்று அவன் பாதத்தில் என்னை தாங்குவான்!
சுற்று முற்றும் அவன் என் நிழலாக பின்தொடர்வான்!

கரங்கள் பற்றி பல கதை பேசி இயற்கையை இரசிப்போம்!
கரை ஒதுங்கும் அலைகளில் கால் நனைத்து மணலில் தடம் பதிப்போம்!
கடலை சாப்பிட்டு கண்களால் காதல் பேசுவோம்!
காதல் சின்னங்கள் தாங்கிய கைப்பை எப்போதும் என் தோள்பட்டையில்!

நான் அடம் பிடிப்பதும் கோவப்படுவதும் என்னவனிடம் மட்டுமே!
நான் ஏன் இப்படி பண்ணுவேன் என்று நன்கறிந்து என்னை சமாதானம் பண்ணுபவனும் அவனே!
நம் காதல் காவியம் படைக்கும் என்று சிரித்து மகிழ்வோம்!

காலனவனுக்கு நம் காதல் பிடிக்கவில்லை போலும்!
கால் நனைக்க கடலில் இறங்கிய என்னவன் ,என்னை சந்தோசப்படுத்த i love u thenu ma என்று கத்தினான்!
கல கல என சிரித்துகிட்டே அவனை நோக்கி ஓடினேன்!
கடல் அலை பேரலை ஆகி என்னவனை தூக்கி சென்றது!
கண்ணெதிரே என்னவன் காணாமல் சென்றுவிட்டான்!
கடவுளுக்கு கூட நம் காதல் பிடிக்கவில்லை போலும்!

என்னவன் எங்கிருந்தாலும் என்னை தேடி வருவான்!
என்னை விட்டு சென்ற இடத்திலே அவனுக்காக ,அவன் நினைவுகளுடன்!
அவனுக்கும் எனக்கும் பிடித்த நிறம் நீலம்!
அந்த குடை கூட நீலம் என்பதால் அதன் கீழ் நான் காத்திருக்கேன்!

என்னவனே திரும்பி வந்திடு என்னிடம்!
என் வாழ்க்கை இப்போ வெறுமையே !
அதை வெளிச்சம் ஆக்க உன்னால் மட்டுமே!
I miss u da
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 385
Post by: SweeTie on October 08, 2025, 08:36:03 PM
குடைக்குள் இரு  இதயங்கள் 
குமுறுகிறது  ஒரு  இதயம்  ... புரியாமல் 
குழப்பத்தில்   தடுமாறும்   மறு இதயம்
காரணமின்றிய   கருத்துவேறுபாடுகள் 
 இதுவே இன்றய  காதலின் பரிணாமம்   


நீல கடல் அலைகள் கோவம் கொண்டதுபோல்
வாலைகுமரி  என்மேல் கோபம் கொண்டதுமேன் ?
கோல மயிலே  என் கொங்குநாட்டு பசுங்கிளியே
காலாறத் தானே  வந்தோம்  கடற்கரைக்கு
பாழாக வேண்டாம்  நம்  நேரம் கண்மணியே

சித்திரை வெயிலில்  நீ நடந்தால்   உன்மேனி
அத்திப்பழம் போல்  சிவக்குமென்று   
அத்தான்  இதயத்தை    குடையாக  ஏந்துகிறேன்
என்  தாபத்தை   புரிந்துகொண்டு   
உன்   கோபத்தை  விட்டுவிடு 

காதல் மொழி  பேசி மயக்கம்  கொண்டாலும்
மோதல்களால்  சில  காலங்கள் போனாலும்
சாதல்  வரும்வரைக்கும்  உன்னோடு நானிருப்பேன் 
பிரியாத  அந்த  வானமும்  கடலும் போல
  பஞ்சமில்லாத  வாக்குறுதிகள் 

தித்திப்பான  காதலை  தியக்க தியக்க பேசி
சத்தமில்லாத முத்தங்களை   சாட்சியாக கொண்டு
காலங்கள் மாறலாம்  நம் காதல்  மாறாது  என்ற
போலி நம்பிக்கைகள்   தத்தளித்தும்   போகலாம் 
கடல் அலையில் சிக்கிய  படகுபோல     
 
 மாலுமி  இல்லாத படகு  திசை மாறிப்போகலாம்   
நிலையில்லா  முகில் கரைந்து  போகலாம்
நிலையான நம் காதல்  பிரியாத வரம் வேண்டும்
காதலோடு  உன்னை கைப்பிடிக்கவேண்டும்
நம் வாழ்க்கை எனும்  பயணம்   சிறப்பாகவேண்டும்



 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 385
Post by: TiNu on October 08, 2025, 10:07:57 PM


நீல நிற கடலில்.. வெண்ணிற நுரைகள்...
தங்க கரைகளில் மீது மெல்ல மெல்ல மோதிட..
என்னை சுடும்.. வெப்பம் காற்றினை..
ஆழி நீரின் குளிர் தன்மையோடு கைகோர்த்து...
என் கன்னங்களை மிதமாக தழுவி வருடிட..
நானோ! எங்கே போவது என்று அறியாது...
கால் போன போக்கில் ஜீவனற்று நடந்தேன்...

தன் வாழ்க்கையின்.. அவசிய.. அனாவசிய..
தேவைகளுக்காக ஓடிகின்றவர்களுக்கு இடையே...
நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்?..
எங்கே போகிறேன்?.. எதற்காக பிறந்தேன்?..
எப்படி வளர்ந்தேன்?.. என்னசெய்ய போகிறேன்?
என் மனதில் எண்ணற்ற வினாக்களுக்கு ...
ஓர் சிறு துளி விடைகள் கூட அறியாது..
என் முன்னே.. கிடந்தது.. உருண்டோடிய
மணலை வெறித்து பார்த்து நடந்தேன்..

அப்போது!! என் மனம் மணலை பார்த்து..
சொன்னது. நீயும் என் இனமடி..
ஓரிடத்தில்.. நில்லாது.. காற்றுக்கும் நீருக்கும்
நடுவே..தள்ளாடும்.. வாழ்க்கையடி..
உனைப்போலவே நானும்..  நல்லவர் யார்?
கெட்டவர் யார்? என்பது புரியாது அறியாது..
தவித்து தனித்து தள்ளாடி நிற்கின்றேன்.

சுட்டெரிக்கும் சூரியனும் மெதுவாக மறைய..
சூரிய ஒளியின் தாக்கமும் குறைவதுபோல் உணர்தேன்..
வாழ்வின் பொருள் அறியாது.. தனியே நிற்கின்றேனே.. 
என்ற என் எண்ணங்களை.. உடைக்கும் ஒரு உருவம்...
என் பின்னே! எனை தொடர்ந்தது.. கைகளில் குடையுடனே..
எனக்கோ அச்சம்.. திரும்ப பார்க்காது நின்றேன்...

மென்மையான குரலில்.. என் காதருகே..
மெல்ல மெல்ல ... பேச தொடங்கியது..
"நான் யாரென உனக்கு தெரியாது... ஆனால்
நீயாரென... நான் அறிவேன் பெண்ணே...."
"உன் சிரசினை காத்து நிற்கும் வாசுகி(குடை)..
நீ யாரிடமும் எதையும்  எதிர் பாராது செய்த உதவிபலன்.."
"இந்த குடையை தாங்கி.. உன்பின்னே நடந்து வரும் நானோ..
அனைவருக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற..
நல்ல எண்ணங்களில்.. முழு உருவம் நானே ஆவேன் ..."
"வாழ்வின்பொருள் அறிந்தவன் நிம்மதி இழப்பான்.. "
"எந்த எதிர்ப்பார்ப்பு இன்றி நீ நீயாக வாழ்ந்திடு ...
நான் என்றும் உன் நிழல்.. என் தொடர்த்திருவேன்... "
"மன அமைதியோடும் மகிழ்வோடும் வாழ்வாயாக"

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 385
Post by: Asthika on October 08, 2025, 10:25:15 PM
காற்று மழையிலும் - உன் காதல் மழையிலும் நனைந்தபடியே ஒரு பயணம்...!!

நீ பெண்ணாகவும்
நான் ஆணாகவும் ஆனதின் இரகசியம்
துலங்கியது
ஓர் மழையிரவில்!

மழை நின்ற
கணத்தின் இலைப்போல்
முகமெல்லாம்
திட்டுத்திட்டாய்
உன் முத்தங்கள்!

சிறுமழை
பெருமழை
எதுவும்
மழையை மட்டும் கொண்டுவருவதில்லை
உன் நினைவுகளையும்!

இடி மின்னைலை கண்டு உனக்குள் வந்த பயம், நமக்கிடையில் இருந்த இடைவெளியை இன்னும் குறைத்தது...!
குடையே இல்லாமல் மழையில் நனைவதுபோல் சுகமாயிருந்தது...! உன் குறும்பு பேச்சு...

என் கைவிரல்கள் உன் கன்னம் தொட, கன்னக்குழியில் நான் நீர்துளியை போல் சிக்கித் தவிப்பதுபோல் உணர்வு...!

உன் ஈரடி இதழ் கண்டு என் ஆறடி தேகமும் அமிலமாய் உருகிப் பாய, அந்த இதழ்கள் இரண்டும் இன்றிரவே - எனக்கு இரவுணவு ஆகியிருக்கலாம்...!

மின்னலுக்கும் இடிக்குமான இடையில் வரும் - அந்த ஒற்றை நொடியை போல் சிலிர்ப்பாய் உணர்கிறேன்...!

உன்னோடு நான் செலவிடும் ஒவ்வொரு நொடியையும்...

மனசுக்குள் இன்பம் கொட்டும் இதயத்தில் ஈரம் சொட்டும், உன் காதல் மழையில் நான் முழுதாய் நனைகிறேன்...
ஒரு மின்னல் போல் என் முன்னே தோன்றினாய் நீ...

மழைக்காலத்தில் - அந்த மாலை நேரத்தில் பூத்த, வானவில்லை போல அவ்வளவு அழகு நீ...!

உன் பார்வை மேகம் என்னை மோதியதில் என் மனசுக்குள் இப்பொழுது அடைமழை...!

மண்ணிலே குதித்தாடும் மழைத்துள்ளிகளை போல ஆனந்தமாய் குதிக்கிறது...! என் மனசு...
நீ
பெண்ணின் ஓர்துளி
நான்
ஆணின் ஓர்துளி
வா,
காதல் பொழிவோம்!
நம் உலகில்
நான்
நீ
பின், நமக்கான மழை!