(https://i.ibb.co/wNyRYQp6/558880360-122255096336037466-1973585089773792826-n.jpg) (https://imgbb.com/)
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் விரிவான பட்டியல் இங்கே. விசா இல்லாத அணுகலை விரிவுபடுத்துவது இந்தியப் பயணிகளுக்கு கலாச்சார பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கும், பல உலகளாவிய இடங்களை ஆராய்வதற்கும் வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.
🏝🏜🏖🏕
அங்கோலா
பார்படாஸ்
பூட்டான்
பொலிவியா
பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்
புருண்டி
கம்போடியா
கேப் வெர்டே தீவுகள்
கொமோரோ தீவுகள்
குக் தீவுகள்
ஜிபூட்டி
டொமினிகா
எல் சால்வடார்
எத்தியோப்பியா
பிஜி
காபோன்
கிரெனடா
கினியா-பிசாவ்
ஹைட்டி
இந்தோனேசியா
ஈரான்
ஜமைக்கா
ஜோர்டான்
கஜகஸ்தான்
கென்யா
கிரிபதி
லாவோஸ்
மக்காவோ (SAR சீனா)
மடகாஸ்கர்
மலேசியா
மாலத்தீவுகள்
மார்ஷல் தீவுகள்
மொரிட்டானியா
மொரிஷியஸ்
மைக்ரோனேசியா
மாண்ட்செராட்
மொசாம்பிக்
மியான்மர்
நேபாளம்
நியு
ஓமன்
பலாவ் தீவுகள்
கத்தார்
ருவாண்டா
சமோவா
செனகல்
சீஷெல்ஸ்
சியரா லியோன்
சோமாலியா
இலங்கை
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
செயின்ட் லூசியா
செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
தான்சானியா
தாய்லாந்து
திமோர்-லெஸ்டே
டோகோ
டிரினிடாட் மற்றும் டொபாகோ
துனிசியா
துவாலு
வனுவாடு
ஜிம்பாப்வே
1.பூடான்:
பூட்டானில் இமயமலை, பனி மூடிய மலைகள், பண்டைய மடங்கள், மலையேற்றப் பாதைகள் பல்வேறு விறுவிறுப்பான இடங்கள் உள்ளது. நீங்கள் பூடானுக்கு இந்தியன் பாஸ்போர்ட் இருந்தாலே சென்று வர முடியும்.
🏜
2) மக்காவு:
இது விடுமுறை நாட்களை அனுபவிக்க ஒரு மிகச்சிறந்த இடமாகும். இந்த அற்புதமான இடத்தில் கண்கவர் இடங்கள் ஷாப்பிங் மற்றும் 300 வருடம் பழமை வாய்ந்த இடங்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இங்கு இந்தியர்கள்
30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம்.
🏝
3) மாலத்தீவுகள்:
இது இந்தியப் பெருங்கடலில் வெப்பமண்டல சொர்க்கமாகும், மாலத்தீவு மொத்தம் 1000 பவளத் தீவுகளால் ஆனது. இது அழகான கடற்கரைகள், நீல தடாகங்கள் மற்றும் பவளப்பாறைகளுக்கு பெயர் பெற்றது.
ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங் மற்றும் பலவற்றின் அற்புதமான விளையாட்டுகளுக்கும் இது பிரபலமானது.
🏝
4) நேபாளம்:
நேபாளம் அனைவராலும் அறியப்பட்ட மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட் ஆகும். இங்கு கண்டுகளிக்க வரலாறு சிலைகள் மற்றும் பலவித ஆச்சர்யங்களை உள்ளது.
இந்த இடத்திற்கு மிக எளிமையாக செல்ல முடியும் மற்றும் பணமும் குறைவாக இருந்தால் போதும்.