(https://i.ibb.co/209gk32V/557601004-122255147138037466-5898292706478813419-n.jpg) (https://ibb.co/ZRjWMzs4)
▪மழைக்காலம் தொடங்கியதும் பாம்புகள் போன்ற குளிர் ரத்த உயிரினங்கள் மனிதன் வாழும் பகுதிக்கு ஏன் படையெடுக்க வேண்டும்...??
▪ அதற்கு சில காரணங்கள் உண்டு.. அவைகள்:
1. மழை நீரால் பாம்பின் வாழ்விடமான வளைகள் (பொந்துகள்), வற்றிய நீர்நிலைகள் நீரால் மூழ்குவது...
2. நமது வீட்டின் கத கதப்பான சூழல் குளிர் ரத்த உயிரினங்களை ஈர்க்கிறது...
3. மழைக் காலம் பாம்பின் உணவுகளான தவளை தேரை போன்ற உயிரினங்களை ஈர்க்கிறது.., பின் அவைகளை உணவாக்க பாம்புகள் நடமாட்டம் அதிகரிக்கிறது..
4. சில வகை பாம்பு இனங்களுக்கு இது இனப்பெருக்க காலம்...
5. கதகதப்பான தார் சாலை குளிர் ரத்த விலங்குகளுக்கு உடல் வெப்பத்தை சீராக்க உதவுகிறது...
நஞ்சுள்ள பாம்புகள் எவை?
1.நல்லபாம்பு Indian_Cobra,
2. கட்டுவிரியன் Krait,
3. கண்ணாடி விரியன் Russell_Viper,
4. சுறுட்டைவிரியன் Saw_scaled_Viper.
▪இந்த நான்கு பாம்பு மட்டுமே அதிக மனித உயிர் இழப்புக்கு காரணமாகிறது. இவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருந்தால் போதும்..
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யலாம்?
1. வீட்டை சுற்றி துய்மையாக, பழைய பொருட்கள் அடசலாக வைக்காமல், குப்பைகள் இல்லாமல் பார்த்து கொள்வது.
2. வீட்டில் இருந்து வெளி வரும் கழிவு நீர் குழாய்கள் சல்லடை போன்ற வலை கொண்டு மூடி வைத்தல்.
3. தூங்கும் முன் கட்டில்கள், தலையணை, மெத்தை விரிப்பு, மெத்தை அடியில் சோதனை இடுவது. தூங்கும் அறை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்.
4. வாயிற் கதவின் கீழ் அல்லது பக்கவாட்டு இடைவெளி இல்லாமல் நிரந்தரமாக அடைத்து வைப்பது. சன்னல் இடைவெளி கவனம் தேவை (கொசு வலை அல்லது நமக்கு தேவை எனும் பொது திறந்து கொள்வது)
5. கழிவறை மற்றும் குளியலறை போதிய வெளிச்சம் மற்றும் சுத்தமாக வைத்து கொள்வது.
கழிவறை வீட்டுக்கு வெளியில் இருந்தால் பாதை முழுவதும் வெளிச்சம் படும் விளக்குகள்.
6. காலணிகளை பொதுவாக ஷு (shoe) தரையில் வைக்காமல், உயரமான இடத்தில் வைப்பது. ஷு போன்ற மூடிய காலணிகள் நன்கு சோதித்த பின்பு அணிவது.
7. வாகனத்தை குறிப்பாக கைப்பிடி, முன் பகுதி நன்கு சோதனை செய்து பின் இயக்குவது.
8. குப்பைகள் மற்றும் எலிகளை வீட்டுக்குள்ளும், வீட்டின் சுற்றுப் பகுதியில் இல்லாமல் பார்த்து கொள்வது.
9. இரவில் டார்ச் விளக்கு இல்லாமல் வெளியில் செல்வது தவறு.
10. தோட்டத்து வேலை செய்பவர்கள் வேலை செய்யும் இடத்தை நன்கு சோதனை இட வேண்டும், சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.
பாம்பு கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
1. மன அமைதி.
2. ரத்த ஓட்டத்தை சீராக வைத்துகொள்ள பதட்டப்படாமல், அழுகை, கத்துதல், ஓட்டம், ஏதும் இருத்தல் கூடாது.
3. உதவிக்கு ஒரு நபரையோ (தைரியமான) அல்லது 108 அவசர ஊர்தி, அல்லது இருக்கும் வாகனத்தில் அரசு மருத்துவமனை (மைய) செல்ல வேண்டும்.
4. கடித்த பாம்பை தேடி ஓட வேண்டாம்.
செய்ய கூடாதவை:
1. இருக்க கயிறு கட்டுதல் வேண்டாம்.
2. கத்தியால் வெட்டி, உறிஞ்ச வேண்டாம்.
3. தனியார் மருத்துவமனை அல்லது வேறு வகை வைத்தியம் கால தாமதம் ஏற்படும்.
▪பாம்பு க்கடிக்கு ANTI SNAKE VENOM (நஞ்சு முறிவு மருந்து) சரியான நேரத்தில் கொடுக்கப்பட உயிர் பிழைத்து கொள்ளலாம்.
பாம்பு கடித்து எத்தனை மணி நேரத்திற்குள் ஒருவரை நச்சு முறிவு மருந்து கொடுத்து பிழைக்க வைக்கலாம் என்பது கடி பட்டவரின் மன நிலை, வயது போன்றவற்றால் மாறும். பொதுவாக 2 இல் இருந்து 4 மணி நேரம்,.. இது குழந்தைக்கும் முதியவர்க்கும் வேறுபடும்...