FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: RajKumar on October 04, 2025, 06:36:13 PM
-
ஒருவரின் இரத்த அழுத்தம் 120 / 80 இருந்தால் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று கருதலாம். இந்த அளவுகளில் எப்போது மாற்றம் ஏற்படுகிறதோ அதனை உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) என்றும் குறைந்த இரத்த அழுத்தம் (Low Blood Pressure) என்றும் குறிப்பிடுகிறார்கள்.
ஒருவர் மேற்கொள்ளும் பணி, மனநிலை, சுற்றுச் சூழல் ஆகிய காரணிகளால் இதய சுருக்கியக்க அழுத்தம் 120 mmHg என்ற அளவிற்கும் மேல் அதிகரிக்கலாம். தேவையான ஓய்விற்குப் பின் இந்த அளவு 120 mmHg என்ற அளவிற்குத் திரும்பிவிடும். இவ்வாறு இயல்பு நிலைக்குத் திரும்பாமல் தொடர்ந்து 120 / 80 mmHg என்ற அளவிற்கு மேலேயே இருந்தால் இதனை உயர் இரத்த அழுத்தம் என்று குறிப்பிடுவதுண்டு.
இரத்தக் கொதிப்பு என்றும் இதனை அழைக்கிறார்கள். இரத்தக் குழாய்கள் தடிமனாகி இவற்றின் உட்புற அளவுகள் குறைந்து சுருங்கிவிடும். இதனால் இரத்தத்தைப் பாய்ச்ச இதயம் அதிகமுறை சுருங்கி விரிவதால அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
இது ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். இதய சுருக்கியக்க அழுத்தம் 140 - 159 mmHg / இதய விரிவியக்க அழுத்தம் 90 - 99 mmHg என்ற அளவுகளில் இருந்தால் முதல் நிலை உயர் இரத்த அழுத்தம்,
இதய சுருக்கியக்க அழுத்தம் 160 > mmHg / இதய விரிவியக்க அழுத்தம் 100 > mmHg என்ற அளவிற்கு மேல் இருந்தால் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் என்று கருதுகிறார்கள். சிலருக்கு இதய சுருக்கியக்க அழுத்தம் மட்டும் அதிகரித்துக் காணப்படும் இதனை Systallic Blood Pressure என்று குறிப்பிடுவர். வேறு சிலருக்கு இதய விரிவியக்க அழுத்தம் மட்டும் அதிகரித்துக் காணப்படும் இதனை Diastolic Blood Pressure என்று குறிப்பிடுவர். இரத்தக் கொதிப்பு நோய் வருவதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். காரணமே இல்லாமலும் உயர் இரத்த அழுத்த நோய் வரலாம். இது வாழ்க்கைமுறை சார்ந்த நோய் ஆகும்.
உடலில் ரத்தம் அதிகரிக்க
தினமும் ஒரு சிறிய பீட்ரூட்டை மிக்ஸியில் அரைத்து கொஞ்சம் உப்பு போட்டு இரவில் குடியுங்கள்..... ரத்தம் அதிகரிக்கும் .
இரத்த குறைவு என்பது இரத்த சோகை எனப்படும Anaemia வகை நோய் இதனால் பாதிக்கப்படுவது சிறுவர் சிறுமியர் இளைஞர்கள்,மகளிர், அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, பிரச்சினை உண்டாகும்,களைப்பு மிகுதியாக காணப்படும், பசியின்மை, தூக்க குறைபாடு ஏற்படும்,மூச்சிறைக்கும், உடனடியாக வைத்தியம் தேவை
ஆரம்ப காலங்களில் வெளிநோயாளி யாக வரும், Hb percentage 7 க்கு கீழ் போனால், உள் நோயாளி யாக சேர்த்து, இரும்பு சத்து ஊசி செலுத்தி குணம் பெறலாம்,
உடலில் ரத்தம் அதிகரிக்க ரத்தம் உருவாக்கும் முறையையும் அதனை அதிகரிக்கும் உணவு வகைகளையும் அதற்கான வழிமுறைகளையும் சரியாக தெரிந்து கொண்டு அதனை முயன்றால் அனைவரும் ரத்த அளவை அதிகரித்துக் கொள்ள முடியும்
உடலில் ரத்தம் உருவாகும் இடங்கள் உடலில் உள்ள இணைப்பு அதாவது Joint
கழுத்து
தோள்பட்டை கைகள் இணைப்பு 3 கை முழங்கை இணைப்பு
மணிக்கட்டு இணைப்பு
விரல்கள் இணைப்பு
இடுப்பு இணைப்பு
கால் முழங்கால் இணைப்பு
கால் மணிக்கட்டு இணைப்பு
கால் விரல்கள்
இந்த ஒன்பது இணைப்புகளையும் சரியாக முழு கவனத்துடன் இடதுபுறமும் வலதுபுறமும் செய்யும் பயிற்சியினால் உடல் ஆரோக்கியமானது மேம்படும் அதேபோல் ரத்தமானது புதிதாக உருவாகும் சுத்திகரிக்கப்படும்
ரத்தத்தை உருவாக்கும் உணவு வகைகள்
முதலாவதாக பீட்ரூட் எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் அழுத்தமானது அதிகரிக்கும் சுத்திகரிக்கப்படும்
கேரட் ஜூஸ்
மாதுளை பழம் ஜூஸ்
பேரிச்சம்பழம் ஜூஸ்
இவை அனைத்தையும் அல்லது ஏதாவது ஒன்றையும் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்