FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 04, 2025, 08:05:10 AM

Title: மூட்டு ஜவ்வு (ligament tear) பாதிப்பை சரி செய்ய....
Post by: MysteRy on October 04, 2025, 08:05:10 AM
(https://i.ibb.co/MkYBFrWd/531833119-1273995564761668-1676668953137441075-n.jpg) (https://ibb.co/xqpFxWPZ)

எதிர்பாராமல் கீழே விழுந்து மூட்டு ஜவ்வுகள் கிழிந்து விட்டால், தாங்க இயலாத வலி ஏற்படும்...

இன்றைய நவீன மருத்துவத்தில் வலியை மறக்க செய்ய பல மருந்துகள் உள்ளன்...மூட்டுகளை அசைய விடாமல் நவீன முறையில் கட்டு போடப் படுகிறது...

ஆனால், எந்த மருத்துவ வசதியும் இல்லாத காலத்தில் கூட நம் முன்னோர்கள் இந்தப் பிரச்சினையை மிக எளிதாக சரி செய்து கொள்ள ஒரு தீர்வை கண்டுபிடித்து உள்ளனர்...

அதை என்னவென்று அறிந்து கொள்வோம்...

மூட்டு சவ்வு கிழிந்ததற்கான மருந்து .

நாட்டு பாக்கு10
புளியங்கொட்டை 10

இவை இரண்டையும் நன்றாக ஊற வைத்து தண்ணீர் விடாமல் அம்மியில் அரைத்து இரண்டு முட்டை வெள்ளைக் கருவுடன் கலக்கி முட்டியில் பற்று போடவும்.

வெள்ளை துணியால் பற்று கீழே விழாமல் கட்டி துணியின் மீது நல்லெண்ணைய் சிறிது ஊற்றவும்.

அது காய்ந்த பின் மறுபடியும் எண்ணை ஊற்றவும்.

முட்டிக்கு யானை பலம் வரும்.

கிழிந்த ஜவ்வும் கூடும்.

காலுக்கு ஓய்வு அவசியம்.

முட்டியை அசைப்பதை தவிர்க்கவும்.

3 நாட்களுக்கு ஒருமுறை பழைய கட்டை பிரித்து விட்டு வென்னீரில் காலை கழுவிய பின் மீண்டும் பத்து போடவும்.

இரண்டு மூன்று நாட்களுக்கு வலி இருக்கும். பின்னர் சிறிது சிறிதாக வலி குறைவதை உணரலாம்.

நம் முன்னோர்கள் கையாண்ட எளிய மருத்துவ முறை இது...