FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: RajKumar on October 03, 2025, 03:27:01 PM

Title: இன்றைய தினம்
Post by: RajKumar on October 03, 2025, 03:27:01 PM
*வரலாற்றில் இன்று*
*03 அக்டோபர் 2025-வெள்ளி*
*===========================*

1392 : ஏழாம் முகம்மது கிரனாடாவின் பன்னிரண்டாவது சுல்தானாக முடிசூடினார்.

1831 : மைசூர், கம்பெனி நிர்வாகத்தின் கீழ் வந்தது.

1833 : இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டது.

1908 : பிராவ்தா பத்திரிகை ரஷ்யத் தணிக்கையைத் தவிர்ப்பதற்காக வியன்னாவில் இருந்து வெளியிடப்பட்டது.

1912 : அமெரிக்கப் படைகள் நிகரகுவாவின் கிளர்ச்சியாளர்களை வென்றன.

1918 : மூன்றாம் போரிஸ் பல்கேரியாவின் மன்னராக முடிசூடினார்.

1929 : செர்பியா, குரோஷியா ஸ்லோவேனியா ராஜ்ஜியம் இணைக்கப்பட்டு அதற்கு யூகோஸ்லோவியா எனப் பெயரிடப்பட்டது.

1932 : ஈராக், பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.

1935 : இத்தாலி, எத்தியோப்பியா மீது படையெடுத்தது.

1940 : வார்ஸாவில் உள்ள யூதர்கள் மரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

1942 : ஜெர்மனியில் ஏ 4 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.

1943 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனிப் படைகள் கிரேக்கத்தில் லிஞ்சியாதெஸ் கிராமத்தில் பொதுமக்கள் 92 பேரைக் கொன்றனர்.

1952 : லாஸ் ஏஞ்செல்ஸில் வீடியோ கேசட் மூலம் முதன் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

1957 : விவித்பாரதி நிகழ்ச்சிகள் முதன் முதலாக ஒலிபரப்பானது.

1962 : சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
வொல்லி சீரா 9 மணி நேரத்தில் 6 முறை பூமியைச் சுற்றினார்.

1963 : ஹொண்டுராஸில் ஏற்பட்ட ராணுவப் புரட்சியால் அங்கு ராணுவ ஆட்சி ஆரம்பமானது.

1963 : ஹெயிட்டியில் சூறாவளித் தாக்கியதில் 5,000 பேர் இறந்தனர்.
ஒரு லட்சம் பேர் காயமடைந்தனர்.

1974 : கச்சத்தீவு பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி, இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

1977 : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி லஞ்ச ஊழல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

1978 : பின்லாந்தில் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 15 பேரும் உயிரிழந்தனர்.

1981 : வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரிஷ் குடியரசு ராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது.
10 பேர் உயிரிழந்தனர்.

1982 : ஸ்வாஸிலாந்தின் மன்னராக 11 வயது நிரம்பிய இளவரசர் மக்கோஸ்மிவா முடிசூட்டப்பட்டார்.

1989 : பனாமாவில் நடைபெற்ற ராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

1993 : சோமாலியாவில் ஆயுதக் குழுவினரை பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர் வீரர்களும் ஆயிரம் சோமாலியர்களும் கொல்லப்பட்டனர்.

2010 : 19 வது காமன்வெல்த் விளையாட்டு டெல்லியில் தொடங்கியது.

2012 : சிரியாவின் அலெப்போவில் நடை பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 34 பேர் கொல்லப்பட்டனர்.

2013 : இத்தாலியின் லம்பேடுசா தீவில் ஆப்ரிக்க குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.

2015 : ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மருத்துவமனை மீது நடந்த விமானத் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
Title: Re: வரலாற்றில் இன்று 03 அக்டோபர்
Post by: RajKumar on October 18, 2025, 12:04:19 PM
*வரலாற்றில் இன்று*
*18 அக்டோபர் 2025-சனி*
*===========================*

1009 : ஜெருசலேமில் புனித செபுல்கர் கிறிஸ்தவ தேவாலயம் கலிபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றிலும் அழிக்கப்பட்டது.

1356 : சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றிலும் அழிந்தது.

1648 : அமெரிக்காவின் முதலாவது தொழிற்சங்கத்தை பாஸ்டன் ஷூ தயாரிப்பாளர்கள் ஆரம்பித்தனர்.

1748 : ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் முடிவுக்கு வந்தது.

1860 : இரண்டாம் அபினிப் போர் முடிவுக்கு வந்தது.

1867 : ரஷ்யாவிடமிருந்து அலாஸ்கா மாநிலத்தை அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது.
இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

1898 : புவெர்ட்டோ ரிக்கோவை ஸ்பெயினிடம் இருந்து அமெரிக்காக் கைப்பற்றியது.

1922 : பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

1944 : சோவியத் ஒன்றியம் செக்கோஸ்லோவேகியாவை முற்றுகையிட்டு நாஜி ஜெர்மனியிடம் இருந்துக் கைப்பற்றியது.

1945 : வெனிசுலாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியை அடுத்து அதன் ஜனாதிபதி பதவி இழந்தார்.

1954 : அமெரிக்காவின் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்ஸிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.

1960 : பிரிட்டிஷ் செய்தித்தாளான நியூஸ் க்ரோனிக்கல், டெய்லி மெயில் உடன் இணைந்தது.
லண்டன் மாலை செய்தித்தாளான ஸ்டார், தி ஈவினிங் நியூஸ் உடன் இணைந்தது.

1963 : பெலிசேட் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பூனை என்ற பெயரை பெற்றது.

1967 : சோவியத் விண்கலம் வெனீரா -4 வெள்ளிக் கோளை அடைந்தது.
வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1991 : தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

அஜர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.

2004 : சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரால் கொல்லப்பட்டார்.

2007 : கராச்சியில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர் பூட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர்.
450 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பூட்டோ காயமின்றி உயிர் தப்பினார்.
Title: Re: வரலாற்றில் இன்று
Post by: RajKumar on November 01, 2025, 12:19:20 PM
(https://i.postimg.cc/MZPYm2dF/IMG-20251101-WA0016.jpg) (https://postimg.cc/4nctXMC6)
Title: Re: இன்றைய தினம்
Post by: RajKumar on November 01, 2025, 12:22:40 PM
(https://i.postimg.cc/tCr4BbfZ/IMG-20251101-WA0005.jpg) (https://postimg.cc/gnZp0CGm)
Title: Re: இன்றைய தினம்
Post by: RajKumar on November 23, 2025, 10:03:31 AM
(https://i.postimg.cc/fTM1614L/IMG-20251123-WA0011.jpg) (https://postimg.cc/Lh0yPC8K)
Title: Re: இன்றைய தினம்
Post by: RajKumar on November 29, 2025, 12:27:15 PM
*வரலாற்றில் இன்று*
*29 நவம்பர் 2025-* *சனி*
*=========================*

526 : சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர்.

1732 : தெற்கு இத்தாலியில் 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,940 பேர் உயிரிழந்தனர்.

1781 : அடிமைகளை ஏற்றிச் சென்ற சொங் என்ற கப்பல் மாலுமிகள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்ரிக்கர்களைக் கொன்றுக் கடலுக்குள் எறிந்தனர் .

1783 : அமெரிக்கா, நியூஜெர்சியில் 5.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1830 : போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.

1847 : வாஷிங்டனில் மதபோதகர் மார்கஸ் விட்மன் அவரது மனைவி மற்றும் 15 பேர் அமெரிக்கப் பழங்குடிகளினால்  கொல்லப்பட்டனர்.

1855 : துருக்கியில் செவிலியர் பயிற்சிக்காக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.

1856 : இந்தியாவில் முதன்முதலாக தபால் கவர் விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

1870 : இங்கிலாந்தில் கட்டாயக்கல்வி அறிவிக்கப்பட்டது.

1877 : தாமஸ் ஆல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை அறிமுகப்படுத்தினார்.

1890 : ஜப்பானில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.

1897 : இங்கிலாந்தில் முதன் முதலாக மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டது.

1899 : பார்சிலோனா கால்பந்துக் கழகம் அமைக்கப்பட்டது.

1915 : கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கியக் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன.

1917 : இந்தியாவில் விமானப் படை அமைக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பிரிட்டனில் கடற்படை பெண்கள் அணி துவங்கப்பட்டது.

1922 : ஹவார்ட் கார்ட்டர் எகிப்தின் துட்டன் காமூன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விட்டார்.

1924 : குதிரைப்பந்தய நேர்முக வர்ணனை ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் வானொலி நிலையத்தின் மூலம் முதன்முதல் ஒலிபரப்பப்பட்டது.

1929 : அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் பயேர்ட் தென்முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.

1944 : அல்பேனியா, நாஜிக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது.

1945 : யூகோஸ்லோவிய கூட்டு மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

1947 : முதலாம் இந்தோ-சீனப் போர்:- வியட்நாமில் மீ டிராக் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் பெரும்பாலும் பெண்கள் குழந்தைகள் அடங்கிய 300 பேரை படுகொலை செய்தன.

ஹைதராபாத் நிஜாமிற்கும் இந்திய அரசிற்கும் இடையே உள்ளது உள்ளபடி உடன்படிக்கை கையெழுத்தானது.

பாலஸ்தீனத்தை பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.

1948 : இந்தியாவில் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1949 : கிழக்கு ஜெர்மனியில் யுரேனியம் சுரங்க வெடிப்பில் 3,700 பேர் உயிரிழந்தனர்.

1950 : வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.

1956 : பிரான்ஸில் பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டுவரப்பட்டது.

1961 : நாசாவின் மெர்க்குரி அட்லஸ்-5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இது பூமியை இருமுறை சுற்றி வந்து புவெர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது.

1963 : கனடாவின் விமானம் மான்ட்ரீலில் விபத்துக்குள்ளாகியதில் 118 பேர் உயிரிழந்தனர்.

1982 : ஐநா பொதுச் சபை சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.

1986 : சுரிநாம் ராணுவம் மொய்வானா கிராமத்தைத் தாக்கி 39 பொது மக்களைக் கொன்றது.

1987 : கொரிய விமானம் தாய்லாந்து- மியான்மர் எல்லைக்கு அருகில் வெடித்து சிதறியதில் 115 பேர் உயிரிழந்தனர்.

2006 : அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று 700 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய ஷாகீன்-1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது.

2012 : ஈராக்கின் ஹில்லா மற்றும் கர்பலாவில் வெடிகுண்டுகளால் 30 பேர் கொல்லப்பட்டனர்.

2019 : செங்கல்பட்டு 37-வது மாவட்டமானது.
Title: Re: இன்றைய தினம்
Post by: RajKumar on December 04, 2025, 07:24:20 PM
(https://i.ibb.co/JwD1xFPd/1000178884.png) (https://ibb.co/JwD1xFPd)
Title: Re: இன்றைய தினம்
Post by: RajKumar on December 05, 2025, 10:40:40 AM
(https://i.postimg.cc/CKw5ZCJ9/Screenshot-20251205-101340-Chrome.png) (https://postimages.org/)
Title: Re: இன்றைய தினம்
Post by: RajKumar on December 05, 2025, 10:46:00 AM
(https://i.postimg.cc/Pf1qMF9G/IMG-20251205-WA0014-(1).jpg) (https://postimg.cc/QVxs8SjS)
Title: Re: இன்றைய தினம்
Post by: RajKumar on December 31, 2025, 10:29:37 AM
*வரலாற்றில் இன்று*
*31 டிசம்பர் 2025-புதன்*
*==========================*

999 : ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் அனைவரும் உலகமே அழிந்துவிடும் எனக் கருதி தேவாலயங்களில் கூடினர்.

1492 : சிசிலியில் இருந்து ஒரு லட்சம் யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1600 : பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி தொடங்கப்பட்டது.

1695 : இங்கிலாந்தில் ஜன்னல் வரி விதிக்கப்பட்டது.
இதனால் பல வீடுகளில் ஜன்னல்களை செங்கற்கள் கொண்டு அடைத்து விட்டனர்.

1790 : மிகப் பழமையான கிரேக்க செய்தித்தாள் எபிமெரிஸ் முதன்முறையாக வெளியிடப்பட்டது.

1847 : ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.

1857 : விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.

1862 : அமெரிக்க உள்நாட்டுப் போர் :- டென்னசி அருகே ஸ்டோன்ஸ் நதி போர் தொடங்கியது.

1881 : இலங்கை முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

1907 : முதல் புத்தாண்டு கொண்டாட்டம் மன்ஹாட்டனில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது.

1917 : பிரிட்டனில் ரேஷன் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

1923: பிபிசி முதன்முதலாக லண்டனின் பிக்பென் கடிகாரத்தின் மணி ஓசையை மணிக்கொருமுறை ஒலிபரப்பியது.

1944 : இரண்டாம் உலகப் போர் :- ஹங்கேரி நாஜி ஜெர்மனி மீது போரை அறிவித்தது.

1946 : அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

1956 : ருமேனிய தொலைக்காட்சி நெட்வொர்க் அதன் முதல் ஒளிபரப்பை புக்கரெஸ்ட்டில் தொடங்கியது.

1963 : மத்திய ஆப்ரிக்க கூட்டமைப்பு சாம்பியா, மலாவி, ரொடீஷியா என மூன்று நாடுகளாகப் பிரிந்து விட்டது.

1965 : மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ராணுவப் புரட்சி நடைபெற்றது.

1981 : கானாவில் நடைபெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் ஹில்லா லிமான் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1986 : புவெர்ட்டோ ரிக்கோ, சான் ஜூவான் நகரில் ஒரு ஹோட்டலை அதன் மூன்று ஊழியர்கள் தீ வைத்ததில் 97 பேர் உயிரிழந்தனர்.

1992 :  செக்கோஸ்லோவாக்கியா கலைக்கப்பட்டு செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக் குடியரசு உருவாக்கப்பட்டது.

1994 : முதலாம் செச்சின் போர் :- ரஷ்ய ராணுவம் குரோஸ்னி மீது தாக்குதலை ஆரம்பித்தது.

பீனிக்ஸ் தீவுகள் மற்றும் லைன் தீவுகளில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப் பட்டதை அடுத்து கிரிபாஸில் இந்நாள் முற்றிலும் விலக்கப்பட்டது.

1999 : போரிஸ் எல்ட்சின் ரஷ்யாவின் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.

2000 : இருபதாம் நூற்றாண்டின் கடைசி நாள்.

2004 : உலகின் அப்போதைய மிக உயரமான தைவானின் 509 மீட்டர் உயர 106 மாடிகளைக் கொண்ட (தைபே 101) கட்டிடம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

2006 : அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை பிரிட்டனிடம் முழுவதுமாக கட்டி முடித்தது.

2009 : நீல நிலவு மற்றும் சந்திர கிரகணம் இரண்டும் நிகழ்ந்தன.

2014 : ஷாங்காயில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்ட நெரிசலில் 36 பேர் உயிரிழந்தனர்.

2018 : ரஷ்யாவின் மாக்னிடோகோர்ஸ்கில் 10 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 39 பேர் உயிரிழந்தனர்.