(https://i.ibb.co/8gXqk572/557731511-122254760726037466-4722947936940755050-n.jpg) (https://imgbb.com/)
புகைப் பிடித்து விட்டு அல்லது மது அருந்திவிட்டு உடனடியாக சூடான தேநீரை அருந்துவதால் எஸாகேஜியல் என்ற புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய வாழ்க்கை முறையில் அதிகப்படியான மக்கள் மது மற்றும் புகைப்பழக்கம் கொண்டிருக்கின்றனர். பலரும் இளம்வயதிலேயே இந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். தற்போதைய காலத்தில் எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கும் பலருக்குமே நோய்கள் தாக்குகின்றது.
இந்த நிலையில் உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகை, மது பழக்கத்தின் காரணமாக விரைவில் மரணம் வந்து விடும். இந்த பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு மது அருந்தி, புகைபிடித்து விட்டு தேனீர் அருந்தும் பழக்கம் இருக்கின்றது.
மது அருந்திவிட்டு புகை பிடித்து விட்டு சூடாக தேநீர் அருந்துவது புற்றுநோயால் இறப்பதற்கு ஐந்து மடங்கு வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றது என சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புகை பிடிக்கும் அல்லது மது அருந்தும் போது சூடாக தேநீர் அருந்துவதன் காரணமாக தொண்டைக்குழி மற்றும் உணவுக்குழாய் உள்ளிட்டவை பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. எனவே, இந்த பழக்கத்தை உடனடியாக கைவிட பலருக்கும் இந்த விஷயத்தை தெரியப்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.