FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on July 29, 2011, 11:44:43 AM

Title: அப்பாவி பெண்ணின் ஊர்கோலம்...
Post by: JS on July 29, 2011, 11:44:43 AM
வேற்றுமை தேவையில்லை !
வெறுமை போதும் !
இந்த உலகத்தை
சூனியமாக்க !!...

வாசலில் பூத்ததோ வண்ணக்கோலம் !
அதை வரைந்தவள் நெஞ்சில் என்ன பாரம் !
வேற்று ஜாதி பெண் இவள்...
வேறு உலகம் அறியாதவள்...

புது கயிற்றின் ஈரம் காயவில்லை
மெட்டியின் ஓசை அடங்கவில்லை
கொடுமை என்னும் நீரில் மூழ்கி
அக்னியில் தன்னை இரையாக்கினாள்...

சுற்றம் சூழ வாழ்த்தப்பட்டவள்
தன்னை வழியனுப்ப வருவார்கள்
என்று நினைத்திருக்க மாட்டாள்
போகிறாள் ஊர்கோலமாய் !!!... :'(
Title: Re: அப்பாவி பெண்ணின் ஊர்கோலம்...
Post by: Yousuf on July 29, 2011, 06:58:46 PM
புகுந்த வீட்டில் பெண்களுக்கு நடக்கும் கொடுமையை கவிதையாய் தந்துள்ளீர்கள் அக்கா...!!!

உணர்சிகரமான கவிதை மனதில் சிறு சங்கடத்துடன் என்னுடைய எத்துனை சகோதரிகளின் வாழ்க்கை இப்படி கேள்விக்குறியாகிறது என்று...!!!
Title: Re: அப்பாவி பெண்ணின் ஊர்கோலம்...
Post by: Global Angel on July 30, 2011, 02:12:43 AM
nalla kavithai nanraga erukirathu thodaratum js unkal pathivukal ;) ;)