FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 21, 2012, 03:20:36 PM

Title: கண்ணியம் காப்பேன் !
Post by: aasaiajiith on April 21, 2012, 03:20:36 PM
என் பதிப்புக்களை  படிப்பவர் பலர்
இருந்தும் என் பதிப்புகளுக்கு
பதில் பதிப்பவர் வெகு சிலர் .

மலர் போன்ற மனம் படைத்து
மனம் வீசும் மனதைப்போல்
மலர் வாரித்தூவி போற்றுபவர் உண்டு

புழுதி போல் தவறாய் அதை படித்து
பழுதி படிந்த மனது போல்
புழுதி வாரித்தூவி தூற்றுபவ்ரும் உண்டு .

போற்றுவார் போற்றினாலும்,புழுதி
வாரி தூற்றுவார்  தூற்றினாலும் 
என் பணி கவிதை பதிப்பதே !

ஏதோ ,கடமைப்பனியாய் ,
கடும்பனியாய் கருதாமல்
களப்பணியாய் கருதி
கவிதை பதிப்பதை
கண்ணியம் காப்பேன் !