FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: Asthika on September 30, 2025, 06:11:07 AM

Title: Oorusanam thoongirichi💝
Post by: Asthika on September 30, 2025, 06:11:07 AM
படம் : மெல்ல திறந்தது கதவு
இசை : விஸ்வநாதன்
பாடியவர் : S.ஜானகி
விரும்பி கேட்டவர் : புவனேஸ்வரி
ஊரு சனம் தூங்கிருச்சி ஊதக்காத்துதும் அடிச்சிருச்சி

பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே
ஊரு சனம்..

குயிலு கருங்குயிலு மாமன் மன குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இல மாயிலு மாமன் கவிக்குயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே

ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடி போனேன்
கண்ணி பொண்ணுதானே
என் மாமனே என் மாமனே
ஒத்தையில அத்த மக ஒன்ன நெனச்சு ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடளியே காலம் நேரம் கூடலியே

ஊரு சனம்...

மாமன் உதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக்கூடாதா
நானும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா, மாமன் காதில் ஏறாதா
நிலாக்காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்

மேலும் மேலும் ஏறும்
இந்த நேரம் தான் இந்த நேரம் தான்

ஒன்ன எண்ணி பொட்டு வெச்சேன் ஓல பாய போட்டு வெச்சான்
இஷ்டப்பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வெச்சான்

ஊரு சனம்...