FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: RajKumar on September 28, 2025, 11:27:31 AM

Title: மன அழுத்தம் குறைய
Post by: RajKumar on September 28, 2025, 11:27:31 AM
*மன அழுத்தத்தை விரட்ட... உங்கள் அன்றாடப் பழக்கங்களில் மாற்றம்!*
¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡

உடல் ஆரோக்கியம் போலவே மனஆரோக்கியமும் இனிய வாழ்வுக்கு அவசியம். மனம் ஆரோக்கியமாக இருந்தால் மன அழுத்தமும் குழப்பமும், பதட்டமும் ஏற்படாது. சமூகத்தில் மற்றவர்களிடம் இயல்பாக பழகமுடியும். தெளிவாக சிந்தித்து நல்ல முடிவுகளை எடுக்க முடியும் தன்னம்பிக்கையும் சுயமதிப்பும், மனவளத்தை காக்கும் சில எளிய பழக்கங்கள் என்ன என்று பார்க்கலாம்.

*நேர்மையாக நினையுங்கள்*

உங்களைச் சுற்றி என்ன, எத்தனை பிரச்னைகள் நடந்தாலும் எவ்வளவு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டாலும், எப்போதும் நேர்மறையாகவே நினையுங்கள். இல்லாவிட்டால் மனம் சோர்ந்து எதையுமே செய்யமுடியாத நிலைக்கு போய்விடுவீர்கள்.

*சரியாக சாப்பிடுங்கள்*

துரித உணவுகளும், சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகளும் மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன. காய்கறி, பழங்கள் முழு தானியங்கள் என்று சாப்பிடும்போது மனம் உற்சாகமடையும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

*நேசிப்பதை செய்யுங்கள்*

நாம் மிகவும் நேசிக்கும் ஒரு செயலை செய்வதற்கான வாய்ப்புகள் நமக்கு கிடைக்கவேண்டும். அது நம் மனதை சுறுசுறுப்பாக ஆக்கும். இது கடினமான வேலைகளை கூட செய்வதற்கான சக்தி அப்பொழுது கிடைக்கும். எனவே நேசிக்கும் ஒரு பழக்கம், விளையாட்டு என்று எதையாவது எப்போதும் செய்யுங்கள்.

*ஓய்வு எடுங்கள்*

தினமும் குத்தனை மணி நேரம்தான் வேலை செய்யவேண்டும் என்ற வரையறை வைத்திருப்பதே காரணமாகத்தான். அதிக அழுத்தம் தரும் சூழல், வேகமாக ஓடும் உலகம், இதற்கு நடுவிலும் போதுமான அளவு ஓய்வெடுங்கள். அதுவே உங்களை மறுநாள் உற்சாகமாக உழைக்க வைக்கும்.

*சமூக வலைதளங்களை குறையுங்கள்*

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களில் நீண்ட நேரம் செலவிடுவது மன உளைச்சலை ஏற்படுத்தும். கண்களுக்கும் நல்லதல்ல. யார் யாருடைய பிரச்னைகளையோ நினைத்து கோபத்தில் கொந்தளிப்பது, புதிதாக கார் வாங்கியவர்கள், சூப்பராக வீட்டை வைத்திருப்பவர்கள், அடிக்கடி சுற்றுலா செல்லும் அறிமுகம் இல்லாத நண்பர்கள் எல்லாம் பார்த்து நம் வாழ்க்கையை ஒப்பீடு செய்து கொள்வோம். அதனால் சுய பச்சாதாபம் அதிகரிக்கும். இதனால் மனஉளைச்சல் அதிகரிக்கும். அதனால் இதனை உதறி தள்ளிவிட்டு அடுத்த காரியம் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.

*நல்ல நண்பர்களை நாடுங்கள்*

தனிமை எப்போதுமே ஆபத்தானது. நல்ல நண்பர்களை உடன் வைத்திருங்கள். அடிக்கடி அவருடன் உரையாடுங்கள். உங்களின் நல்ல முயற்சிகளை பாராட்டும் உற்சாகமாக எப்போதும் பேசும் நண்பர்கள் உங்கள் மனதுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பார்கள்.

*உடற்பயிற்சி செய்யுங்கள்*

தினமும் அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்தால் உடலுக்கு மட்டும் இன்றி மனதுக்கும் வலிமை தெரிகிறது.

உடற்பயிற்சி தினமும் உடற்பயிற்சி செய்யும்போது சுரக்கும் ஹார்மோன்கள் உங்களின் மனஅழுத்தத்தை குறைக்கின்றன.

உற்சாக மனநிலையை தருகின்றன. கடினமான உடற்பயிற்சிகளை செய்தால், நல்ல தூக்கம் வரும். அந்த வகையிலும் அது மனசுக்கு நல்லது

*உங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்*

எப்படிப்பட்ட சரிவைச் சந்தித்தாலும் உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். எனக்குத் திறமை இல்லை, நான் தோல்விகளைச் சந்திக்க பிறந்தவன்(ள்) என்பது போன்ற நினைப்புகள் மிகவும் ஆபத்தானவை. உங்களுக்கு நீங்களே மோசமான விமர்சனம் செய்யாதீர்கள். இதனால் மேலும் மனதில் குழப்பமே ஏற்படும்.

*சரியான தூக்கம் முக்கியம்*

போதுமான சரியான நேரத்துக்கு முறையாக தூங்குவது. உடல் நலனுக்கும் இது மிக அவசியம். இது மனவளம் காக்கவும், உதவும்.

தினமும் ஒரே நேரத்துக்கு தூங்கப்போய், சரியான நேரத்துக்கு விழித்தால் ஆழ்ந்த உறக்கம் சாத்தியம் ஆகும். இது மனத்தை மிக மிக ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

*இந்த 9 பழக்கங்களை சரியாக செய்தால் உங்கள் மன வளமும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.