FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thooriga on September 26, 2025, 05:35:57 PM
-
கண்ணகி மாதவி ஆவதும்
மாதவி கண்ணகி ஆவதும்
கட்டிய கணவன் நடத்தையை பொறுத்தே
-
அவளை அடங்காபிடாரி என்றனர்
அவள் அம்மா அனைவர்க்கும் அடங்குவதை பார்த்த ஆத்திரமே அவளை அடங்க விடவில்லை என்பதை அறியாமல்
-
இன்னொருத்தி வந்து விடுவாளோ என்று பயந்தேன்
அவன் கதையில் நானே இன்னொருத்தி தான் என்பதை மறந்து
-
எதிர்த்து பேசக்கூடாது ...
எதிர்த்து பேசக்கூடாது ...
என சொல்லிச் சொல்லி அடக்கிய சமூகம் தான் ..
அவள் செத்த பிறகு சொல்கிறது
யாரிடமாவது ஒரு வார்த்தை
சொல்லியிருக்கலாமே என்று...
-
நம்பியவனே விற்றுப் போகையில்....
அறிமுகம் இல்லாதவன் அறுப்பதில்....
என்ன ஆச்சரியம்...?
(சந்தையில் விற்கப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியின் மன குமுறல்)