(https://i.ibb.co/svnVs8ky/553502681-122253707132037466-3102696187914295025-n.jpg) (https://imgbb.com/)
இந்திய அறிஞர்களில் சாணக்கியர் மிகவும் முக்கியமானவர். அவரின் சாணக்கிய நீதியும், அர்த்தசாஸ்திரமும் இன்றளவும் இந்தியாவின் முக்கியமான நூல்களாக கருதப்படுகிறது. சாணக்கியரின் அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியது. அந்த வகையில் வாழ்க்கையில் ஒருபோதும் பகை வளர்த்துக் கொள்ளாத சிலரைப் பற்றி கூறியுள்ளார்.
சாணக்கிய நீதியின் படி ஒருவர் வாழ்க்கையில் முன்னேறவும், அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் சிலரை ஒருபோதும் எதிரியாக வைத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இவர்களுடனான பகை உங்களுக்கு அழிவையும், மரணத்தையும் தேடித்தரும் என்று சாணக்கியர் கூறுகிறார். வாழ்க்கையில் தெரியாமல் கூட பகை வளர்த்துக் கொள்ளக்கூடாத அந்த நபர்கள் யாரென்று பார்க்கலாம்.
மன்னர் அல்லது ஆட்சியாளர்:
மன்னர் அல்லது ஆட்சியாளருடன் நேரடியாக மோதலில் ஈடுபடுவது உங்களுக்கு சிறையில் தள்ளலாம் அல்லது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். அவர்களுடன் மோதலில் ஈடுபடுவதற்கு முன் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைளை ஆயத்தமாக்கிக் கொள்ளுங்கள். முன்னெச்சரிக்கை ஏற்பாடு இல்லாமல் ஒருபோதும் அவர்களுடன் மோதலில் ஈடுபடக்கூடாது.
உங்களை நீங்களே வெறுக்கக்கூடாது:
ஒருவர் தன்னைத்தானே வெறுத்தலோ, மரியாதைக் குறைவாக நடத்தினாலோ, தங்களின் உடல் மற்றும் மனதை வெறுத்தலோ மரணம் அவர்களை எப்போது வேண்டுமென்றாலும் நெருங்கலாம். மற்றவர்கள் நம்மை மதிக்கும் முன் நாம் நம்மை மதிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
வலிமையானவர்கள்:
உடலாலும், செல்வத்தாலும் மற்றும் ஆயுதத்தாலும் வலிமையான ஒருவருடன் எப்போதும் மோதலில் ஈடுபடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். வலிமையான மற்றும் புத்திசாலியான ஒருவருடன் மோதும் போது நீங்களும் அவர்களுக்கு சமமானவர்களாக இருக்க வேண்டும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
முட்டாள்:
முட்டாளுடன் நட்பாக இருப்பது எவ்வளவு ஆபத்தானதோ அதேயளவு அவர்களுக்கு எதிரியாக இருப்பது அதைவிட ஆபத்தானது. அவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகியே இருங்கள். அவர்கள் உங்களின் நற்பெயரை எப்போது வேண்டுமென்றாலும் கெடுக்கலாம்.
மருத்துவர் மற்றும் சமையல்காரர்:
உங்களின் மருத்துவர் மற்றும் சமையல்காரரிடம் ஒருபோதும் தகராறு செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தை உண்டாக்கலாம்.
நெருங்கிய நண்பர்கள்:
நீங்கள் ஒருபோதும் எதிரியாக மாற்றிக் கொள்ளக்கூடாத முக்கியமான நபர்களில் ஒருவர் உங்களின் நெருங்கிய நண்பர்கள். ஏனெனில் உங்களின் அனைத்து ரகசியங்களும் தெரிந்த நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு எதிரியாகும்போது அது உங்களின் மரியாதைக்கும், உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.