FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on September 26, 2025, 07:36:05 AM

Title: 100 வருடம் வாழ விரும்புவர்களா நீங்கள்?இதை செய்து பாருங்கள்...
Post by: MysteRy on September 26, 2025, 07:36:05 AM
(https://i.ibb.co/tpwfyDpd/553707620-122253762512037466-4048218079593992134-n.jpg) (https://ibb.co/7txc7Kt9)

காய், கனி, பூ, தண்டு, வேர்க் கிழங்கு என்று அனைத்தையும் மனிதருக்கு அளித்து, அவர்களின் வாழ்வைக் காக்கும் அதிசய மரம் வாழை. தற்காலத்தில் நடைமுறையில் உள்ள சூரிய குளியல் போன்று தான் முற்காலத்தில் சித்தர்கள் வாழையிலை குளியலை மேற்கொண்டு தான் 100 வருடங்கள் வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகின்றது.

வாழையிலை குளியல்:

வாழை இலை குளியல் என்பது காலை வெயிலில், உடலில் துண்டுடன் கோரைப்பாயில் கிடந்து, தலையில் ஒரு ஈரத்துண்டை முண்டாசு போல கட்டிக் கொண்டு, உடல் முழுவதும் வாழை இலை கொண்டு நன்கு கட்டிக் கொள்ள வேண்டும்.
மூச்சு விடுவதற்கு மட்டும் இலைகளை முகத்தின் அருகே சற்று விலக்கி விட்டு, குறைந்தபட்சம் அரை மணி நேரம் அந்த சூழலில் இருப்பதே, வாழை இலை குளியல்.
அவ்வப்போது இலைகளின் மேல் தண்ணீர் தெளித்து வர வேண்டும், நல்ல வியர்வை சுரக்கும், ஆயினும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால், இடையிலேயே வெளியில் வந்து விடலாம்.

வாழை இலை குளியல் எதற்கு?
உடலில் உள்ள சுவாச கோளாறுகள், ஒவ்வாமை சரும பாதிப்புகள், கை கால் வீக்கம், உடலில் சேர்ந்த கெட்ட நீரால் ஏற்படும் வியாதிகள், சிறுநீரக கோளாறுகள், உடல் சுரப்பிகளின் பாதிப்புகள், தசை நரம்பு பாதிப்புகள் போன்ற பாதிப்புகள் அனைத்தையும் சரிசெய்து, உடல் எடையைக் குறைத்து, மனதுக்கு புத்துணர்வு கொடுத்து, உடலை பொலிவோடு, வலிமையாகவும் ஆக்கவல்லது.

குளியலுக்கு முன் நிறைய தண்ணீர் பருக வேண்டும், குளியல் முடிந்த பின் சிறிது இந்துப்பு கலந்த எலுமிச்சை தேன் சாற்றை, நிறைய தண்ணீர் விட்டு, நிதானமாக பருகிய பின், சற்று நேரம் கழித்து, வழக்கமான குளியலை மேற்கொள்வது நலம். குளியலுக்கு பின்னர், அன்றைய தினம் முழுவதும், பச்சையான பழ காய்கறி உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது இல்லையெனில் சிறிது அரிசி உணவு சேர்த்துக் கொள்ளலாம்.