(https://i.ibb.co/NgP6wzXc/548663281-122252996684037466-3659290011874256307-n.jpg) (https://imgbb.com/)
கோயில்களில் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம், சபரிமலை அரவணை பாயாசம் என வழங்கப்படுகிறது.
திருப்பதியில் லட்டு தயாரிக்க 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ஏழுமலையான் கோயிலில் 3 வகைகளில் லட்டு தயார் செய்யப்படுகிறது.
அவற்றில் ஒன்று பக்தர்களுக்கு கவுன்ட்டர்களில் விற்பனை செய்யப்படும் 175 கிராம் லட்டு. இரண்டாவது லட்டு 1750 கிராம் எடையில் தயார் செய்யப்படும் பெரிய லட்டு ஆகும். அது போல் மூன்றாவது லட்டு, சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வதற்காகவே தயார் செய்யப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பூந்தி பிரசாதம் வழங்கப்பட்டு இருந்தது.
அதைத் தொடர்ந்துதான் 1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் பூந்திக்கு பதில் லட்டு பிரசாதம் வழங்கும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போது வரை பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2015 இல் திருப்பதி லட்டுக்கு புவிசார் காப்புரிமை வழங்கப்பட்டது. இதனால் இந்தியாவில் திருப்பதி லட்டு என்ற பெயரில் யாரும் லட்டை தயார் செய்யக் கூடாது.
சுமார் 175 கிராம் எடை கொண்ட 5100 லட்டுகளை தயாரிக்க 185 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 160 கிலோ நெய், 30 கிலோ முந்திரி, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கல்கண்டு, 4 கிலோ ஏலக்காய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இந்த லட்டு பிரசாதம் விநியோகமானது 308 ஆண்டுகளை கடந்து ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 309 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.