FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on July 29, 2011, 11:34:37 AM
-
விசித்திரமான உலகில்
வேடிக்கையானது வாழ்க்கை !...
ஒரு துளி நீர் என்றாலும்,
தேக்கி வைக்கும் மணல் பரப்பு.
தீராத வேதனை என்றாலும்
தூக்கி எறியும் போக்குவரத்து...
சொந்த பந்தங்கள் இருந்தும்
யாரும் இல்லாத குடியிருப்பு...
நேர்மையாய் வாழ்பவனை
களவாடி பார்க்கும் பொழுதுபோக்கு...
வானத்தில் பறக்கின்றவனை
சிறகொடித்து வாசலில் கட்டி வைக்கின்றனர்...
தன் சுயநலத்திற்காக,மனிதனின்
இரத்தத்தை உரம் ஆக்குகின்றனர்...
பிணந்திண்ணிகள் வாழும் இவ்வுலகில்
வாழ்வதறியாது,வானத்தைத் தொடும்
முடிவில்லா சிகரம்.....ஏழை மாணவனின்
கண்ணீர்த் துளிகள் !!!....
-
சொந்த பந்தங்கள் இருந்தும்
யாரும் இல்லாத குடியிருப்பு...
நேர்மையாய் வாழ்பவனை
களவாடி பார்க்கும் பொழுதுபோக்கு...
பிணந்திண்ணிகள் வாழும் இவ்வுலகில்
வாழ்வதறியாது,வானத்தைத் தொடும்
முடிவில்லா சிகரம்.....ஏழை மாணவனின்
கண்ணீர்த் துளிகள் !!!
சுய நல வாதிகள் வாழும் உலகத்தில் ஏழைகள் வாழ்வது கடினமாகி விட்டது...!!!
ஏழை மாணவனின் வேதனையை சிறப்பாக கவி வடிவில் தந்துள்ளீர்கள் அக்கா...!!!
மிக்க நன்றி...!!!
-
nalla kavithai....thodaratum ungal kavithai js ;)