FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 21, 2025, 08:16:49 AM

Title: மாத்திரை வேண்டாம் கருவேப்பிலை போதும்..
Post by: MysteRy on September 21, 2025, 08:16:49 AM
(https://i.ibb.co/pjzg6npM/548310002-1261379426023282-8960584043438417400-n.jpg) (https://ibb.co/CK7qpWFY)

கருவேப்பிலை பற்றியும் அதன் ஆரோக்கிய பயன்கள் பற்றியும் நீங்கள்
அறிந்திருக்கலாம். நமது உணவுப்பழக்கத்தில்
தினமும் பயன்படுத்தும் ஒன்றுதான் என்றாலும் நம்மில் பலர் அதை ஒதுக்கி வைத்துவிட்டு தான் உணவு உட்கொள்கிறோம். அதிலும் குழந்தைகள் அதை தொடுவதேயில்லை.

கருவேப்பிலை ஏன் தினமும் சேர்க்க வேண்டும்?

1. முடி உதிர்தல் கட்டுப்படும், நரைமுடி கருப்பாகும்.

2. கண் பார்வை தெளிவாகும்.

3. சர்க்கரை நோய் வராது.

4. கெட்ட கொழுப்பை நீக்கும்.

5. உடல் எடையை சீராக வைத்திருக்கும்.

6. இரும்புச்சத்து அதிகம் கொண்டது.

7. ரத்தசோகைக்கு சிறந்த மருந்து.

8. காலை எழுந்ததும் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பைத் தரும்.

9. கல்லீரலை பாதுகாக்கிறது.

10. நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

* இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான நன்மைகள் கருவேப்பிலையில் உண்டு. இதில் உள்ள carbohydrates, phosphorous, iron, copper, minerals, fiber, calcium, Vitamins A, B, C and E போன்ற சத்துக்கள் எண்ணற்ற நன்மைகளை தரக்கூடியது.

மாத்திரை வேண்டாம் :

*சமூக சூழலில் சிறுவயதிலேயே பல குழந்தைகள் கண் பார்வை கோளாறில் கண் கண்ணாடி அணிந்து செல்வதை பார்க்கிறோம். முடி உதிர்தல், இளம்வயதில் நரை முடி, உடல் சோர்வு, துரித உணவு பழக்கத்தால் உடல் எடை கூடுதல் போன்ற பல உடல் பிரச்சனைகளை இன்றைய சமுதாயம் சந்தித்து வருகிறது.

*இதுபோன்ற அனைத்து சிக்கல்களுக்கும் நாம் உடனடியாக அணுகுவது மருத்துவரைத்தான். அவர்களும் நமது உடலின் சத்து குறைபாட்டிற்கு ஏற்ற மாத்திரைகளை பரிந்துரைகின்றனர். அதில் முழு பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே. முடிந்த வரை நமது உடலுக்கு தேவையான சத்துக்களை தினமும் நாம் உட்கொள்ளும் உணவின் வழியில் சேர்த்துக்கொள்வது தான் சிறந்த தீர்வு.

கருவேப்பிலை தினமும் எடுத்துகொள்ள எளிய வழி :

*என்னதான் கருவேப்பிலையின் குணங்கள் மற்றும் சிறப்புகள் நமக்கு தெரிந்தாலும் அதை குழந்தைகளை சாப்பிட வைப்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு ஒரு எளிய வழி சுத்தமான நாட்டு கருவேப்பிலையை நிழலில் காயவைத்து அரைத்து மிக ருசியான இட்லி/தோசை பொடியாக செய்துவிட்டால் குழந்தைகள் மட்டுமல்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்..