FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on September 19, 2025, 08:17:12 AM

Title: தெள்ளவாரி, நாதாரி அர்த்தம் தெரிஞ்சுக்கலாம் வாங்க...
Post by: MysteRy on September 19, 2025, 08:17:12 AM
(https://i.ibb.co/vCHQm1J1/548271229-122252617796037466-7149904606133035971-n.jpg) (https://ibb.co/p6xRZ232)

#நாதாரி:
நாதாரின்னா ஏழ்மை, பொய்த்துப் போன வெள்ளாமைக்குச் சொந்தமான நிலம்ங்றது அர்த்தம். இந்த மாதிரியான நிலத்தின் காரணமாக உண்டாகிற வரி பாக்கியை நாதார்பாக்கின்னு சொல்லுவார்கள் . அந்த ஏழ்மையான ஆசாமி, நாதாரி.

#பன்னாடை:
இது நாம எல்லார்த்துக்கும் தெரிஞ்சதுதான். தென்னை மரத்துல, பாளைகளக் காப்பாத்துற வலை நார். அந்த வலையை, கள்ளை வடி கட்டுறதுக்கும் பாவிப்பாங்களாம். அப்படி, குப்பை கூழத்தை தாங்கி இருக்குற பன்னாடைய மலிவாகத் தூக்கி எறியுறது வாடிக்கை. அந்த தாக்கத்துல, உதவாக்கரை ஆசாமிகளை திட்டுறதுக்கு பன்னாடைய பாவிக்கறதும் வழக்கமாயிடுச்சு.

#கேப்மாரி:
அகராதி சொற்படி, இது செங்கல்பட்டு தென்னாற்காடு மாவட்டத்துல அந்த காலத்துல இருந்த, திருட்டும் தப்புத் தண்டா செய்யுற ஒரு கூட்டத்தோட பேருங்ளாம். அதுவே மருவி கேப்மாரி ஆயிடுச்சுங்ளாம்.
கேப்புமாரி .

#தெள்ள‌வாரி:
கோயம்பத்தூர்ல அப்பப்ப சொல்வது வழக்கம். இந்தத் தெள்ளவாரி எப்பிடி உருப்பட்டு பொழப்பு நடத்தப் போறானோ? குடியானவனுக்குப் பொறந்தவன் எவனாவது இப்பிடி பொச்சுக்கு வெயில் அடிக்குற வரைக்கும் தூங்குவானா?? இந்த மாதிரி போகும் அவுங்க திட்டுறது.. தெளிவு இல்லாமச் சுத்துறவன் தானுங்க தெள்ளவாரி ஆயிட்டான்.