FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 19, 2025, 07:52:39 AM

Title: பாம்பு பார்த்து பயப்படும் அதிசய மூலிகை நிறைந்த சிறியா நங்கை....
Post by: MysteRy on September 19, 2025, 07:52:39 AM
(https://i.ibb.co/99KvXSMB/549200035-1261487609345797-8015777265934664692-n.jpg) (https://ibb.co/kgbynvdz)

சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலை கசப்புத்தன்மையாக இருக்கும். இவ்விலை மிளகாய்இலைகளை ஒத்திருக்கும்.

நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர்.

வீடுகளின் வேலியில் சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்பு எட்டிப்பார்க்காது. அதாவது சிறியாநங்கை இலை மீது பரவி வரும் காற்று பாம்பின் மீது பட்டால் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்பால் செயல்பட முடியாமல் போய்விடுமாம்.

பாம்புக்கடி, தேள் கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். இதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.

சிறியாநங்கையின் இலை மற்றும் வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. அக்காலத்தில், வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வேரை, கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள். அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் அவர்களை தாக்காது

தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. நீரிழிவு நோய்க்கும், அலர்ஜிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்துகிறார்கள்.

சிறியாநங்கை இலைகளை, எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்...