(https://i.ibb.co/qYSgts8z/547569595-122251799498037466-2059201205439249627-n.jpg) (https://ibb.co/GQ6MK2DX)
உலகம் எப்படி உயிர் பெற்றது? விஞ்ஞானம் சொல்கிறது, நாம் ஏற்கிறோம்.
உயிரினங்கள் எப்படி தோன்றின? விஞ்ஞானம் உரைக்கிறது, நாம் கேட்கிறோம்.
மனித இனம் எப்படி எழுச்சி பெற்றது? விஞ்ஞானம் விளக்குகிறது, நாம் அறிந்து கொள்கிறோம்.
பணம் எப்படி உருவானது? பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர், நாம் அறிகிறோம்.
மனிதனின் நல்ல குணங்கள் எப்படி மறைந்தன? மனிதயியல் அறிஞர்கள் முன் வைக்கின்றனர், நாம் உணர்கிறோம்.
மனிதன் எதனால் மனித நேயம் மறந்தான்? எவரும் விளக்கத் தேவையில்லை, பணத்தினால் தான் என்பதை மனிதன் அறிவான்.
மனிதனை, மனிதன் வெறுக்கக் காரணமான பணத்தை ஒழிக்கும் வழியை யார் அறிவார்?
அப்படிப் பட்ட நிலையில், குணத்தின் நாயகனான கடவுள், கோவிலில் குடியிருப்பாரா அல்லது குப்பை மேட்டிலா அல்லது நம் வீட்டிலா?
விதையை விதைத்தவன் விதையை அறுப்பான், அதைப் போலவே பணத்தை உருவாக்கி பணத்தைக் கொண்டு அனுபவித்தவனே பணத்தை அழிக்க வேண்டும்.
பணம் அழிய அழிய மனித குணம் மீண்டும் உயிர் பெறும். குணம் உயிர் பெற்று உயர்ந்தால் மனிதன் உயர்ந்த மனிதன் ஆகிடுவான்.
உயர்ந்த மனிதர்கள் அதிகமானால் உயர்ந்த வாழ்க்கை மேலோங்குகிறது.
பணமே வாழ்க்கை என்ற எண்ணம் பரந்திருப்பில் குணம் குப்பை மேட்டில் தான் மறைந்திருக்கும்.