FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: MysteRy on September 10, 2025, 08:38:58 AM

Title: நாராயணசாமி போலீஸ் வேலைக்கு நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார்.
Post by: MysteRy on September 10, 2025, 08:38:58 AM
(https://i.ibb.co/zHGYnpzZ/images.jpg) (https://imgbb.com/)

"மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா?" என்று அவரிடம் கேட்கப்பட்டது. உடனே அவர் தேர்வு அதிகாரிகளிடம் "எனக்கு கொஞ்சம் கால அவகாசம்" வேண்டும் என்றார். அதிகாரியும் சிரித்துக் கொண்டே "சரி ஒரு வாரம் தருகிறோம்.. விடையுடன் வா.." என்றார். அவர் வீடு திரும்பினார்.

"வேலை கிடைத்து விட்டதா?" என்று அவர் மனைவி கேட்டாள். அவர் சொன்னார் "அநேகமாக வேலை கிடைத்த மாதிரிதான்... இல்லாவிட்டால் நேர்முகத் தேர்வின் போதே கண்டுபிடிக்க எனக்கு ஒரு கேசைத் தருவார்களா? 15 நாட்களுக்குள் அந்தக் கொலையாளியை நான் கண்டு பிடிக்க வேண்டும்..."
🤭🤭🤭