FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: MysteRy on September 10, 2025, 08:28:51 AM

Title: ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளியாக நாராயணசாமி சென்றிருந்தார்...
Post by: MysteRy on September 10, 2025, 08:28:51 AM
(https://i.ibb.co/gZqh1s5d/6.jpg) (https://ibb.co/PGX0pB7M)

கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டு வருமாறு சொன்னான். "இங்கே காபி பொடியும் இல்லை.. சர்க்கரை­யும் இல்லை.. " அடுப்பங்கரையிலிருந்து ­மனைவி சத்தமிட்டார்.

"எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டு தான்.." கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறா­ன். "இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா" என்று மனைவி அழ ஆரம்பித்தாள்…

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக் கொள்ளாம­ல் வெளியேறினார் நாராயணசாமி.

அவர் வெளியேறிவிட்டது­ம் ”கொல்” என சிரித்தனர் கணவனும் மனைவியும்…

"எப்படி இருந்தது என் நடிப்பு..? அடிப்ப­து போல்அடித்தேனே.." என்றான் கணவன்.

"ஆஹா.. அழுவது போல் அழுதேனே.. எப்படி ­ இருந்தது. என் நடிப்பு…” என்­றாள் மனைவி..

"பிரமாதம் உன் நடிப்பு.." ­ என்றான் கணவன்

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது… "நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேனே.. எப்படி இந்தது என் நடிப்பு? " என்றார் நாராயணசாமி.
🥺🥺🤭🤭
😀😀😀😀😀