FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 09, 2025, 08:33:42 AM

Title: ஞாபகசக்தி விருத்திக்கு சூரணம்.. 🎄🎄🎄
Post by: MysteRy on September 09, 2025, 08:33:42 AM
ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம்.
🎄
செய்முறை விளக்கம் ...
1 - வல்லாரை இலை - 70 -கிராம்
2 - துளசி இலை - 70 -கிராம்
3 - சுக்கு - 35 -கிராம்
4 - வசம்பு - 35 -கிராம்
5 - கரி மஞ்சள் -35 -கிராம்
6 - அதிமதுரம் -35 -கிராம்
7 - கோஷ்டம் - 35 -கிராம்
8 - ஓமம் - 35 -கிராம்
9 - திப்பிலி - 35 -கிராம்
10 - மர மஞ்சள் - 35 -கிராம்
11 - சீரகம் - 35 -கிராம்
12 - இந்துப்பு - 35 -கிராம்
இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.
🎄
உண்ணும் முறை :
காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும்.
ஒன்றிரண்டு மாதங்களில் மறதி, மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும். மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் காப்பாற்றும். 🦚