FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 06, 2025, 08:15:41 AM

Title: தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...
Post by: MysteRy on September 06, 2025, 08:15:41 AM
(https://i.ibb.co/Dg1dz50T/542692826-1247985937362631-4554473711492733809-n.jpg) (https://imgbb.com/)

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவு, நீர் சத்து அதிகம் இதனால் உடல் எடை அதிகரிக்காது, உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும், இதனால் எளிதாக யாரும் சோர்வடைய மாட்டார்கள்.

எல்லா காலங்களில் கிடைக்கும் இந்த வெள்ளரிக்காய் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கிய நன்மைகள் அள்ளி தரும் சிறந்த ஆரோக்கிய உணவாகும்.

சத்துக்கள்:

உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கும் வெள்ளரிக்காய், உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்களை அகற்ற உகந்த உணவாகும். சீராக உணவில் வெள்ளரிக்காய் சேர்த்துக் கொள்வது சிறுநீரக கற்கள் உண்டாகாமல் பாதுகாக்க பயனளிக்கும்.

மேலும், வெள்ளரிக்காயில் இருக்கும் வைட்டமின் எ, பி, மற்றும் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை சக்தியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. வெள்ளரிக்காயில் 12% வைட்டமின் சி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொட்டாசியம், மெக்னீசியம், சிலிகான் போன்ற மினரல் சத்துக்கள் கொண்டிருக்கும் வெள்ளரிக்காய் சருமத்திற்கு நல்ல பயன்கள் அளிக்கிறது.

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் டோன், ஸ்மூத்னஸ் என எல்லா வகையிலும் சரும நன்மைகள் பெறலாம்.

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுப்படும், இரத்த அழுத்தம் சீராகும், கொலஸ்ட்ரால் குறையும்.

மேலும், இதில் இருக்கும் செக்ஸோலார்சிகரேசினோல், லேசிக்கிரியினோல் மற்றும் பினோரிசினோல் (Secoisolariciresinol, lariciresinol and pinoresinol) பெண்களுக்கு ஏற்படும் மார்பக, கருப்பை வாய் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்கும்.

அதிகமாக ஏற்படும் ஹேங்கோவர் மற்றும் தலைவலியை போக்கும் நன்மையையும் வெள்ளரிக்காய் அளிக்கிறது. இதில் இருக்கும் சிலிகான் மூட்டு, தசைகளுக்கு வலிமை அளித்து எலும்பு வலி குறைய செய்கிறது.

வெள்ளரிக்காய் ஜூஸ்:

இரண்டு வெள்ளரிக்காய்
பாதி தக்காளி
கால்வாசி வெங்காயம்
இரண்டு டேபிள்ஸ்பூன் நறுக்கிய பார்ஸ்லி
ஒன்று அல்லது இரண்டு மிளகாய்
நறுக்கிய பூண்டு ஒன்று
தயிர் கால் கப்
பாதி டீஸ்பூன் எலுமிச்சை சாறு.
கால் டீஸ்பூன் சீரகம்
கால் டீஸ்பூன் உப்பு
இவற்றை கலந்து தயாரிக்கும் ஜூஸ் குடித்து வந்தால் உடல் சுத்தமாகும், இது லோ - கலோரி ஜூஸ் என்பதால், உடல் எடை குறைக்கவும் உதவும்.