(https://i.ibb.co/cXvXw6L0/541142018-122250329462037466-5758772535639907676-n.jpg) (https://imgbb.com/)
குழந்தைப் பிறந்த பிறகு அதன் ஒவ்வொரு வளர்ச்சி கட்டங்களும் பெற்றோர்களுக்கு ஒரு மைல்கல். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான கட்டம்தான் குழந்தை எழுந்து நின்று நடைபழகும் தருணம். சுமார் ஒரு வயது நிரம்பி விட்டால், குழந்தைகள் எழுந்து நின்று நடக்க முயல்வர். தங்கள் குழந்தை நடைப்பழகும் மகிழ்ச்சியில் களிப்படையும் பெற்றோர்கள் சந்தையில் கிடைக்கும் எல்லாப் பொருட்களையும் வாங்கி விடுகின்றனர். அப்படி பெரும்பாலான பெற்றோர்களால் வாங்கப்படும் பிரதான பொருள் வாக்கர்..
ஒரு குழந்தை வாக்கரைப் பயன்படுத்துவதனால், அதன் பாதங்கள் முழுவதுமாகப் பூமியில் ஊன்றப் படுவதில்லை. ஒரு சிறப்பான நடைப் பழக்கம் என்னவென்றால் நடப்பவரின் பாதங்கள் முழுவதும் பூமியில் பதிய வேண்டும். வாக்கரைப் பயன்படுத்தும் குழந்தைக் கால்களை உயர்த்தி நடக்கப் பழகுகின்றது.
நம் முற்காலத்தில் பயன்படுத்திய ’மர நடைவண்டி’ அதுதான் மிகச் சிறந்த நடைபயிற்சி கருவி. அதைப் பயன்படுத்துவதினால் குழந்தை தனது பாதத்தை பூமியில் நன்றாக ஊன்றுகிறது. பக்கவாட்டுப் பிடி இல்லாததால் நடைக்கான தசைப்பயிற்சியை, இடுப்பு மற்றும் கால் தசைக்கு ஏற்றவாறு பயிற்சி தந்து நடையைச் செம்மையாக்கும். குழந்தைக்கு போதுமான வலு கிடைத்தபின், குழந்தை சீராக நடக்க உதவி புரியும். உளவியல் ரீதியாக மெதுவான, மிதமான வேகம் குழந்தைக்கு ஏற்றது. இதைத் தருவது நம் ஊர் நடைவண்டி.
சங்ககால இலக்கியங்களில் ‘முக்கால் சிறுதேர்’ என்று குறிப்பிடப்பட்டது, நடைவண்டி. குழந்தைகளுக்கு பொம்மையாக மட்டுமின்றி, நடைபயில்வதற்குக் கற்றுத்தரும் சிறந்த ஆசிரியர்.
குழந்தைகளை வைத்திருக்கும் அத்தனை பெற்றோர்களும் பாரம்பரிய நடைவண்டிகளை வாங்கி உங்கள் குழந்தையின் கால்களுக்கு சிறப்பான பாதையைக் காட்டுங்கள்..!