FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 04, 2025, 08:36:46 AM

Title: தேங்காய் எண்ணெய் – நல்லெண்ணெய்: தலைக்கு தேய்க்க சிறந்தது எது?
Post by: MysteRy on September 04, 2025, 08:36:46 AM
(https://i.ibb.co/kgwxB9p7/541250250-1246340797527145-737922787759746008-n.jpg) (https://imgbb.com/)

தலைக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டுமா அல்லது நல்லெண்ணெய்யை பயன்படுத்த வேண்டுமா???

முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பலரும் இன்றளவும் தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர். ஆனால், இளம் தலைமுறையினரிடம் தான் அப்பழக்கம் தற்போது இல்லை. எனினும், தலைக்கு தேய்ப்பதற்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவது ஆரோக்கியமா அல்லது நல்லெண்ணெய்யை பயன்படுத்துவது ஆரோக்கியமா என்ற கேள்வி பலருக்கு இருக்கும்.

பித்தத்தைக் குறைப்பதற்காக தலையில் நல்லண்ணெய்யை தேய்க்கும் பழக்கம் இருந்ததாக மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். மற்றொரு புறம், உடல் அதிகப்படியான குளிர்ச்சியாக இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய்யை தலையில் தேய்த்ததாகவும் கூறப்படுகிறது.

உதாரணத்திற்கு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலைக்கு நல்லெண்ணெய்யை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களாகவும், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் தலைக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஏனெனில், நாகர்கோவில் பகுதி குளிர்ச்சியான சூழலில் அமைந்திருக்கும். அதன் காரணத்தினால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தேங்காய் எண்ணெய்யை தேய்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று, வெப்ப மண்டல பகுதிகளில் வசிப்பவர்கள் நல்லெண்ணெய்யை தலைக்கு தேய்க்கும் வழக்கத்தை கடை பிடித்தனர்.

எனவே, தலைக்கு எண்ணெய் தேய்ப்பதை முடி வளர்ச்சியை தூண்டும் ஒரு காரணியாக பார்ப்பதை விட, உடலில் பித்தத்தை சீராக்கும் தன்மை இருப்பதாக புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு நபருடைய மரபியல் ரீதியான காரணங்கள் தான் முடி வளர்ச்சியை தீர்மானிக்கும்.

அதன்படி, நம் உடலின் தன்மை உணர்ந்து நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான எண்ணெய்யை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்