FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 03, 2025, 08:38:31 AM

Title: தோசை சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா?
Post by: MysteRy on September 03, 2025, 08:38:31 AM
(https://i.ibb.co/0yZ05fJz/543363018-122250219056037466-6016838137750596786-n.jpg) (https://ibb.co/9H2xPqYd)

பரபரப்பான இந்த உலகில் ஆரோக்கியமாகவும், உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வது என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. நீங்கள் எவ்வளவுதான் உடற்பயிற்சிகள் செய்தாலும் உணவு விஷயத்தில் கட்டுக்கோப்பாக இல்லாத வரை நம்மால் ஆரோக்கிய வாழ்வை வாழ முடியாது. ஆரோக்கிய உணவுகள் என்னும்போது நாம் தினசரி சாப்பிடும் உணவுகளில் பல உணவுகள் நமக்கே தெரியாமல் பல நன்மைகளை வழங்கக்கூடும்.

இந்தியர்களின் உணவுகளில் குறிப்பாக தமிழர்களின் தினசரி உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ஒரு உணவு தோசை ஆகும். ஆனால் உடல் எடையை பராமரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தோசை சாப்பிடலாமா? கூடாதா? என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். தோசை சாப்பிடுவது எடையை குறைக்க உதவுமா? இல்லையா?என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
...
எடையை குறைக்க தோசை சாப்பிடலாமா?

பொதுவாகவே தென்னிந்திய உணவுகள் ஆரோக்கியமானவை மற்றும் சுவையானவை என்ற கருத்து உள்ளது, ஆனால் அவை எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை பொறுத்தே இது நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக பிளைன் தோசை மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் இதில் எந்தவிதமான கூடுதல் திணிப்புகளும் இல்லை. ஓட்ஸ் மற்றும் தானியங்களில் தோசை சுடுவது குறைவான கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதாகவும், எடை குறைப்பிற்கும் வழிவகுக்கிறது. எனவே எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக தோசையை சாப்பிடலாம்.

இந்த சுவையான உணவு சமநிலையான பொருட்களை கொண்டிருப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படுவதால் இதில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் உள்ளது. இது உங்கள் ஊட்டச்சத்து எண்ணிக்கையை நிலையாக வைத்திருக்க அனைத்தையும் கொண்டிருப்பதால் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஆரோக்கியமான உணவாக இருக்கிறது.

தோசை இயற்கையான பொருள்களின் மூலம் தயாரிக்கப்படுகிறது மேலும் மாவானது குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் வரை புளிக்க வைக்கப்படுகிறது. இதன்மூலம் இதில் தாவர புரோட்டின்கள் அதிகரிக்கிறது. இதிலிருக்கும் நொதித்தல் விளைவாக இது விரைவில் செரிமானம் அடைகிறது.

தோசை சுவையான உணவாகவும் அதேசமயம் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது, இதன் முக்கிய அம்சமே இதில் குறைவான கலோரிகள் இருப்பதுதான், மேலும் இது நான் ஸ்டிக் பாத்திரத்தில் குறைவான அளவு எண்ணெயில் செய்யப்படும் போது இதன் ஆரோக்கிய நன்மைகள் அதிகரிக்கிறது. சுவையான உணவு மூலம் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

தோசையின் மூலப்பொருட்களில் கால்சியம் மற்றும் இரும்புசத்து இருப்பதால் உடலை வலிமையாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் தோசையை சாப்பிடலாம். இது எலும்புகளை வலிமையாக்குவதுடன், உடலில் ஆக்சிஜன் சுழற்சியை அதிகரிக்கிறது. மேலும் உடல் சுறுசுறுப்பாக இருக்கத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.

உடலின் சீரான வளர்ச்சிக்கும், செயல்பா டுகளுக்கும் வைட்டமின்கள் மிகவும் அவசியமானதாகும். செல்களின் வளர்ச்சிக்கும் வைட்டமின்கள் அவசியமாகும். உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின் ஆன வைட்டமின் சி தோசையில் உள்ளது. இது இரத்த நாளங்களின் பராமரிப்பு, குருத்தெலும்புகளின் வளர்ச்சி, திசுக்களின் பராமரிப்பு போன்றவற்றிற்கு அவசியமாகும்.

தோசை ஒரு ஆரோக்கியமான உணவாகும், ஏனெனில் இது மிகவும் குறைவான நிறைவுற்ற கொழுப்பைக் கொண்டுள்ளது, இது அதிக நிறைவுற்ற கொழுப்பு இதய நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதால் இது ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.