FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 03, 2025, 08:27:38 AM

Title: வாழைப்பூவை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்!
Post by: MysteRy on September 03, 2025, 08:27:38 AM
(https://i.ibb.co/cjB9T9X/541845420-1247233617437863-4009528497222748226-n.jpg) (https://ibb.co/rVjhyhf)

வாழைமரத்தின் அனைத்து பகுதிகளும் நமக்கு பலன் தரக்கூடியது. வாழைப்பூவை நாம் சமையலில் சேர்ப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாக மாறிவிட்டது. கிராமப்பகுதிகளில் பல வீடுகளில் கட்டாயம் வாழைமரம் காணப்படும். வாழைப்பூ மிகவும் அரிதாக கிடைக்க கூடிய ஒரு பொருள் எல்லாம் இல்லை. ஆனாலும் இதனை நாம் ஏனோ அதிகம் பயன்படுத்துவதில்லை. வாழைப்பூவின் பயன்கள் பற்றி தெரிந்த பின்னர் கட்டாயம் நீங்கள் வாழைப்பூவை சமையலில் பயன்படுத்துவீர்கள்.

வாழைப்பூவை இரண்டு வாரங்கள் உட்கொண்டால் இரத்தில் உள்ள கொழுப்புகள் குறைக்கப்பட்டு, இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இரத்தசோகை வராது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மன அழுத்தத்தால் வரக்கூடிய வாயுத்தொல்லை, செரிமானக்கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகியவை ஆற தொடர்ந்து ஐந்து மாதங்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம்.

மூலநோய், இரத்தம் வெளியேறுதல், மூல புண்கள், மலச்சிக்கல், சீதபேதி போன்றவற்றிற்கு இந்த வாழைப்பூ மருந்தாக பயன்படுகிறது.

வாய் துர்நாற்றம் மிகுந்த அவமானத்தை தரக்கூடியது. வாய்துர்நாற்றம் நீங்கவும், வாய்ப்புண்கள் ஆறவும் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம்.

பெண்களை வாட்டி வதைக்கும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு இது மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.

வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது.

வாழைப்பூவில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

வேக வைத்த வாழைப்பூ பொரியல், நீரிழிவு நோய்களுக்கு மிகச்சிறந்த உணவாகும். இதில் உள்ள ஹைப்போகிளைசீமிக் எனும் வேதிப்பொருள், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.